பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

433
    (பொ - ள்.) கொல்லாவிரதியர் எனப்படும் சித்தாந்தச் செல்வராம் சிவனடியார்கள் திருவருள் தூண்டப் பெருங்காதலாம் பத்தியினால், கல்லாலெறிந்து வழிபட்டனர்; கை வில்லா லடித்தும் வழிபட்டனர்; கனியினுமிக்க இனிமைவாய்ந்த தனித்தமிழாம் நற்சொல்லாற் போற்றிப்புகழ்ந்தும் வழிபட்டனர்; பச்சிலைதூவியும் வழிபட்டனர்; அங்ஙனம் வழிபட்டு மெய்யன்பரெல்லாரும் இன்புற்றுய்ந்தனர்; அக் கொல்லா விரதியர் முன் வல்லவா றெழுந்தருளும் மூன்று திருக்கண்களையுடைய சிவகுருமணியே! அன்பு ஒரு சிறிதுமில்லாத நாயேன் எவ்வகைத் தொண்டினைச் செய்து உய்வேன்!

     (வி - ம்.) கல்லாலெறிந்து வழிபட்டது சாக்கியநாயனார். வில்லாலடித்தது அருச்சுனன். சொல்லாற்றுதித்தது காரைக்காலம் மையார். நன்னெறிச் செல்வர் நால்வர் முதலியோர். பச்சிலை 1 தூவியது கண்ணப்ப நாயனார்.

(22)
முன்னிலைச் சுட்டொழி நெஞ்சேநின் போதம் முளைக்கில்ஐயோ
பின்னிலைச் சன்மம் பிறக்குங்கண் டாயிந்தப் பேய்த்தனமேன்
தன்னிலை யேநில்லு தானே தனிச்சச்சி தானந்தமாம்
நன்னிலை வாய்க்கும்எண் சித்தியுங் காணும் நமதல்லவே.
    (பொ - ள்.) ஐம்பொறிகளாலும் கொள்ளப்படும் தனக்கு வேறாம் உலகியற் புலன்களாம் முன்னிலைச் சுட்டினை மனமே ஒழித்துவிடுவாயாக; நின்போதம் முனைக்குமாயின், ஐயோ அவாமேலிட்டுப் பிறப்புண்டாகும்; பொருந்தாத இப் பேய்த்தன்மை உனக்கு எதன் பொருட்டு? அடங்கி நிற்றலாகிய தன்னிலையிலே நிற்பாயாக; நின்ற விடத்துத் தானகவே ஒப்பில்லாத உண்மையறிவு இன்பமாம் நன்னிலை திருவருளால் வாய்க்கும் : எண்பெரும் பேறுகளாகிய சித்திகளும் 2 எளிதாக விரும்பின் வாய்க்கும்; புறத்தே காணப்படும் உலகமும், உடலும், உறவும், உலகியற் பொருள்களும் நம்முடையன அல்லவே? (அவற்றை நம்மவவென்று பற்றுக்கொள்ளின் பிறன் பொருள் வௌவும் பேதையாவோம். திருவருட்குரியவென்று கொண்டு இரவற் பொருளைப் பேணுமாறு பேணின் 3 அடிமைவாழ்வெய்துவோம்.)

(23)
சொல்லான் மவுன மவுனமென் றேசொல்லிச் சொல்லிக்கொண்ட
தல்லால் மனமறப் பூரண நிட்டையி லாழ்ந்ததுண்டோ
கல்லாத மூடன் இனிஎன்செய் வேன்சகற் காரணமாம்
வல்லாள னான மவுன சதானந்த மாகடலே.
 1.  
'வன்திறல்.' 12. கண்ணப்பர், 109. " 'யாவர்க்கு மாமிறை,' 10. 109.
 2.  
'மந்திரத்தான்' சிவஞான சித்தியார், 12. 3 - 4.
 3.  
'உடம்பினை முன்னம்.' 10. 705.