| "இரும்பைகி ழுறாதம்வலித்தாற் போலியைந்தங் குயிரை |
| எரிபாலிகபச் செய்வதுபோல் இவனைத்தா னாக்கி |
| அரும்பித்தங் குரத்தையனல் அழிப்பதுபோன் மலத்தை |
| அறுத்தல் அப்பணைந்த உப்பேபோல் அணைந்து |
| விரும்பிப்டெ னினைக்குளிகை யொளிப்பதுபோ லடக்கி |
| மேளித்து இந்நான் எல்லாம் வேதிப்பா னாகிக் |
| கரும்பைத்தே வானபாலைக் கனியமுதைக் கண்டைக் |
| கட்டியை யெனந் திருப்பன் அந்த முத்தியினிற் கலந்தே." |
| - சிவஞானசித்தியார், 11. 2 - 5. |
(4)
சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி அருவுருவத் | தன்மை நாமம் | ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவறநின் | றியக்கஞ் செய்யும் | சோதியைமாத் தூவெளியை மனதவிழ நிறைவான | துரிய வாழ்வைத் | தீ தில்பர மாம்பொருளைத் திருவருளை நினைவாகச் | சிந்தை செய்வாம். |
(பொ - ள்.) 'சாதிகுலம் . . . இயக்கஞ்செய்யும்' - விழுமிய முழு முதல்வன் (சார்பினால் தோன்றாது, எப்பொருட்கும், யாண்டும் சார்பென நின்றருளும் ஓர்வரும் பொருளாதலால்) உலகோர் கூறும் சாதியும், குலமும், (இருவினைக்கீடாகத் தொடர்புற்று வரும்) பிறப்பு இறப்புகளும், (அவற்றால் வரும் கட்டாகிய) பந்தமும் (இக் கட்டினின்று திருவருளால் செவ்வி வருவித்து விடுவித்துத் திருவடியிற் கூட்டுவிப்பதாகிய ஒட்டென்னும்) வீடாகிய முத்தியும், காரண நிலையாகிய அருவமும், காரியமாகிய உருவமும் ஆகிய தன்மைகளும், (பிறப்பினால் ஏற்படும்) பெயர்களும் ஆகிய ஏதுமின்றி, உயிர்ப்பொருள் உயிரில் பொருள்களாகிய எல்லாவற்றிற்கும், யாண்டும், நீக்கமற நிறைந்து நின்று அவ்வவற்றை இவர் தந்தூர்ந்து இயக்கி இயங்கச் செய்தருளும்;
'சோதியை . . . சிந்தைசெய்வாம்' - (சோதியே சுடரே சூழொளி விளக்கே எனச்) சிறப்பித்துச் சொல்லப்படும் பேரொளிப் பிழம்பை, நனிமிகப் பெரிய மாசில்லாத அருட்பெருவெளியை, (அவனருளால் அவன்றாள் வணங்குதலாகிய நற்றவத்தின் நின்றவர்தம்) படர்தலாகிய தியான உள்ளம் முதல்வன் நினைப்பன்றி வேறு எந்நினைப்புங் கொள்ளாது பற்றற்று நீங்க, அவ்வுள்ளத்து மேலோங்கி நின்றருளும் நிறைவான, பேரருட் பெருவெளியின் பெருவாழ்வைக் குற்றமற்ற (மேலோர்க்கும், மேலோர்க்கும், மேலோர்க்கும், மேலாகிய) ஒப்பில் மேற்பொருளைத் திருவருளையே நினைவாகக் கொண்டு நினைந்து தொழுவாம்.