கூறாய ஐம்பூதச் சுமையைத் தாங்கிக் | குணமிலா மனமெனும்பேய்க் குரங்கின் பின்னே | மாறாத கவலையுடன் சுழல என்னை | வைத்தனையே பரமேநின் மகிமை நன்றே. |
(பொ - ள்.) மாயாகாரியப் பொருளாய் நிலமுதலாகப் பகுக்கப்படும் ஐம்பூதத்தாலாய இவ்வுடம்பின் சுமையைத் தாங்கிக்கொண்டு இயல்பாகவே நற்குணம் வாய்க்கப்பெறாமல் தீக்குணம் வாய்க்கப் பெற்றுள்ள மனமெனும் பேய்க்குரங்கின் பின்தொடர்ந்து, நீங்காத கவலையுடன் சென்று சுற்றித் திரியும்படியாக எளியேனை வைத்து விட்டனையே மேலான மெய்ப்பொருளே இச் செயல் நின்னருட்குப் பெருமையாகுமோ? இஃது அழகியது.
(வி - ம்.) மனமென்னும் குரங்கு இயல்பாகவே மயக்கங் கொண்டது; மேலும் அதனைப் பேயும் பிடித்துவிட்டால் அதனுடைய தலை தடுமாற்ற நிலையினை என்னென்று கூறுவது? இவ்வுண்மை வருமாறு:
| "மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன் |
| கையொன் றுடைமை பெறின்." |
| - திருக்குறள், 838. |
(4)
நன்றெனவுந் தீதெனவும் எனக்கிங் குண்டோ | நானாகி நீயிருந்த நியாயஞ் சற்றே | இன்றெனக்கு வெளியானால் எல்லாம் வல்ல | இறைவாநின் அடியருடன் இருந்து வாழ்வேன். |
(பொ - ள்.) நன்மையென்றும், தீமையென்றும் அடியேனுக்கு இவ்விடத்துத் தனியுரிமையும் முதன்மையும் உண்டோ? தேவரீர் அடியேனை உள்ளடக்கி நானாகியிருந்த உண்மை முறை சிறிதளவேனும் எளியேனுக்கு இந்நாள் வெளியானால், எல்லாம் வல்ல இறைவனே! (நின்னடிமை யென்னும் நீர்மை தோன்றும்; தோன்றவே) நின் மெய்யடியார்கட்கு அடிமையாய் உய்வு வேண்டி அவர் பணி செய்து அவருடனிருந்து வாழ்வேன்.
(5)
வாழ்வெனவுந் தாழ்வெனவும் இரண்டாப் பேசும் | வையகத்தார் கற்பனையாம் மயக்க மான | பாழ்வலையைக் கிழித்துதறிச் செயல்போய் வாழப் | பரமேநின் ஆனந்தப் பார்வை யெங்கே. |
(பொ - ள்.) (செய்த தொழிலுக்குத் தக்க கூலி கைமேல் கிடைப்பது போன்று முற்பிறப்பில் நான் என்னும் முனைப்பால் ஏற்படும் விருப்பு வெறுப்புடன் செய்த இருவினைக் கீடாக வரும் செல்வ வறுமைகளை) வாழ்வெனவும் தாழ்வெனவும்1 உயர்வு தணிவாகப் பேசுவது
1. | 'மலைக்குமகளஞ்ச.' 7. 6. 1. |