பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

615
சிற்றுயிர்களும் வேறறப் புணரும் புணர்ப்பு மெய்ப் புணர்ப்பு. அதுவே புனிதாத்துவிதம்; சுத்தாத்துவிதம்.

(4)
 
பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்த மாகவுண்மை
சாதித்தார் பொன்னடியைத் தான்பணிவ தெந்நாளோ.
     (பொ - ள்) பாதிவிருத்தம் சிவஞான சித்தியார் "அறியாமை அறிவகற்றி' எனப்படும் சித்தியார் திருப்பாட்டால் இவ்வுலகம் நிலையில்லாதது. அதனால் உலகப் பயன்களும் நிலையில்லாதன என்னும் மெய்ம்மையினை எடுத்துக்காட்டி மயக்கந் தெளிவித்து உண்மை நிலை நாட்டியருளிய சகலாகம பண்டிதரென்னும் அருணந்தி தேவ நாயனாரின் பொன்னடிகளை அடியேன் பணிந்து வழிபடுநாள் எந்நாளோ?

     (வி - ம்.) அத் திருப்பாட்டு வருமாறு :

"அறியாமை அறிவகற்றி அறிவி னுள்ளே
    அறிவுதளை அருளினால் அறியாதே அறிந்து
 குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடும்
    கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயிற்
 பிறியாத சிவன்தானே பிரிந்து தோன்றிப்
    பிரபஞ்ச பேதமெல்லாந் தானாய்த் தோன்றி
 நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி
    நின்றென்றுந் தோன்றிடுவன் நிராதாரன் ஆயே"
- சிவஞான சித்தியார், 8. 2 - 20.
(5)
 
சிற்றம் பலமன்னுஞ் சின்மயராந் தில்லைநகர்க்
கொற்றங் குடிமுதலைக் கூறுநாள் எந்நாளோ.
     (பொ - ள்) திருச்சிற்றம்பலத்தின்கண் நிலைபெற்றுத் திகழும் வாலறிவின் வடிவினராகிய தில்லை நகரத்தைச் சேர்ந்த கொற்றவன் குடி உமாபதி சிவநாயனாருக்கு ஆசிரியராகிய திருக்கடந்கை மறைஞான சம்பந்தர் திருவடியைக் கூறுநாள் எந்நாளோ? முதல் - ஆசிரியர்.

(6)
 
குறைவிலருள் ஞானமுதல் கொற்றங் குடியடிகள்
நறைமலர்த்தாட் கன்புபெற்று நாமிருப்ப தெந்நாளோ.
     (பொ - ள்) குறைவிலா நிறைவாகிய திருவருள் உணர்விற்கு முதலாகிய கொற்றவன்குடி யடிகளாகிய உமாபதி சிவநாயனார்தம் தேன் நிறைந்த தாமரை மலர் போன்ற திருவடிக்குப் பேரன்பு பூண்டு நாம் தொழுது கொண்டிருக்குநாள் எந்நாளோ?

(7)
 
நாளவங்கள் போகாமல் நன்னெறியைக் காட்டிஎமை
ஆளவந்த கோலங்கட் கன்புவைப்ப தெந்நாளோ.
     (பொ - ள்) நாள்கள் வீணாள்களாகக் கழிந்து போகாமல் திருவடியை நேரே சேர்ப்பிக்கும் நன்னெறியினை உணர்த்தியருளி அடியேமை