| "நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும் |
| முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச் |
| சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுட் |
| கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே." |
| முறை - ஆகமம். - 1. 61 - 1. |
"உண்டுடுத்து இன்பங்கொண்டு வாழ்வார், துன்பம் மண்டக் கண்டு துயருறுவர். அதனால் அவர்கள்" காக்கைக்கே இரையாகிக் கழிவர் (பக்கம் 59.)
பிறப்புத்துன்பமும் இறப்புத் துன்பமும் பேசவொண்ணாப் பெருந் துன்பம்; நினைக்கவொண்ணா நெஞ்சுடைக்கும் நெடுந்துன்பம், இவ்வுண்மை வருமாறுணர்க :
| "என்றென் றெண்ணி யிருக்குமுயி ரிடர்ப்பட்டழியு மெழில்வரைக்கீழ் |
| ஒன்றும் ஒருவன் தனைப்போலக் கருப்பா சயப்பை யுறுத்துதலான் |
| மன்ற வுததி மறிந்தாழ்வான் வருத்த மென்ன வருந்தியிடும் |
| நின்ற கருப்பா சயவுதக வெள்ளங் கொள்ள நிறையழிந்தே." |
| - சிவதருமோத்திரம், சனனமரணவியல், 21 |
| "அங்கி யதனிற் றங்கியிடு மயோ மயத்த கும்பத்திற் |
| றங்கு மொருவன் தபனம்போற் றபனம் எய்து தாயுதரத் |
| தங்கி சுடவே யழலனைய சூசி யதனா லாகத்தைப் |
| பங்கித் திடவே படுமிடரி லிருநாற் குணிதம் பட்டழுங்கும்." |
"22
| "கருப்பா சயமே கட்டமதாம் அதனி னதிகங் கடுங்காலு் |
| முரிக்க மிகவு மோகமுற முன்னை யுணர்வு மந்நிலையே |
| மரிக்க ஆலைக் கரும்பெனவே யோனி வழியின் வலிதொலைய் |
| நெருக்கப் பட்டு நிலமிசையே தோன்று முயிரு நிலையுடனே." |
" 23.
| "தனத்தினை மனைதனைத் தானி யந்தனை |
| நினைத்தினை யெவரனு பவிப்பவர் நீங்குநா |
| ளெனக்கிவை யன்னிய மாகு மேயெனா |
| மனத்துயர் மலியவே மாயு மாவியே." |
" 26
| "வந்திடும் மரண துன்ப மறித்துரை செய்யப் போமோ |
| உந்திமே லையும் பித்து முணர்வொடு பொறிக லங்கி |
| நந்திடா விருளே மூடி நாவுலர்ந் தலமந் தென்னே |
| ந்தமா விறப்பிற் றுன்பம் பவத்துன்பத் தெண்மடங்கே." |
| - மெய்ஞ்ஞானவிளக்கம். |
| "நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை |
| மேற்சென்று செய்யப் படும்" |
| - திருக்குறள், 335. |