பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


75


        "சிரகிரி . . . . . . ..குருவே

     (வி - ம்) கரு - கருப்பை. குகை - ஒளி நுழைவழியிலாப் பழிமிகு சிற்றிடம். குளிகை - செம்பைப் பொன்னாக்கு மாற்றுமருந்து, பரிசித்து - தோய்ந்து. வேதித்து - மாறும்படிசெய்து. பட்சம் - தண்ணளி.

     அந்தங்கள் :

    1.வேதாந்தம் 2. சித்தாந்தம் 3. கலாந்தம் 4. போதாந்தம் 5. நாதாந்தம் 6. யோகாந்தம் என அறுவகைப்படும்.

     ஆண்டவன் ஆருயிர்களைச் செம்பிற் களிம்புபோற் பற்றியுள்ள மலத்தை நீக்கிச் செம்பைப் பசும்பொன் ஆக்குவதுபோல் திருவருளால் ஆண்டு அடிமையாக்கினன் என்பதாம். இவ்வுண்மை வருமாறுணர்க :

"செம்பிரத குளிகையினாற் களிம்பற்றுப் பொன்னாய்ச்
    செம்பொனுடன் சேருமலஞ் சிதைந்தாற் சீவன்
 நம்பனுடன் கூடும்எனிற் பொன்போல் அல்லன்
    நற்குளிகை போலஅரன் நணுகுமலம் போக்கி
 அம்பொனடிக் கீழ்வைப்பன் அருங்களங்கம் அறுக்கும்
    அக்குளிகை தானும்பொன் னாகா தாகும்
 உம்பர்பிரான் உற்பத்தியாதிகளுக் குரியன்
    உயிர்தானும் சிவானுபவம் ஒன்றினுக்கும் உரித்தே."
- சிவஞானசித்தியார், 11. 2 - 3.
     நிறைநலம் உடைமையும் துன்ப ஏதுவாம் நோயின்மையும் உடைய மருத்துவன் நலமின்மையும் நோயுண்மையும் உடைய நோயாளிக்கு உற்ற காலத்து உறுமருந்துதவி நோய்நீக்கி நலமுறச்செய்வன். நோயாளியும் நோய் நீங்கப்பெற்று மருத்துவனொப்ப நலமெய்துவன். ஆனால் மருத்துவன் போன்று மற்றொரு நோயாளிக்கு மருந்து நல்கி நோய்நீக்க மாட்டுவானல்லன். அம்முறையால் அவன் மருத்துவனுக்கு யாண்டும் அடிமையே; ஒரு காலத்தும் மருத்துவனோ டொப்பாகான்.

(7)
கூடுத லுடன்பிரித லற்றுநிர்த் தொந்தமாய்க்
    குவிதலுடன் விரிதலற்றுக்
  குணமற்று வரவினொடு போக்கற்று நிலையான
    குறியற்று மலமுமற்று
நாடுதலு மற்றுமேல் கீழ்நடுப் பக்கமென
    நண்ணுதலு மற்றுவிந்து
  நாதமற் றைவகைப் பூதபே தமுமற்று
    ஞாதுருவின் ஞானமறறு