பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


92


"போற்றுந் தகையன பொல்லா முயலகன் கோபப்புன்மை
 ஆற்றுந் தகையன ஆறுசமயத்1 தவரவரைத்
 தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
 ஏற்றுந் தகையன இன்னம்ப ரான்ற னிணையடியே."
- 4, 101 - 7.
    மாயை வாயிலாக உண்டாகும் அறிவு சுட்டுணர்வாகும். அம் மாயை தானல்லாத வுடம்பைத் தான் என உயிர் எண்ணும்படி அவ்வுயிரை மயக்கும் இயல்பிற்று. அதனால் அது மயக்குகின்றது என்பதாம். இவ்வுண்மை வருமாறுணர்க :

"நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர்
 வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமல னுக்கோர்
 சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமும் உயிர்க்காய்
 வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமுஞ் செய்யு மன்றே."
- சிவஞானசித்தியார், 2. 3 -3.
(3)
மின்னனைய பொய்யுடலை நிலையென்றும் மையிலகு
    விழிகொண்டு மையல்பூட்டும்
  மின்னார்க ளின்பமே மெய்யென்றும் வளர்மாட
    மேல்வீடு சொர்க்கமென்றும்
பொன்னையழி யாதுவளர் பொருளென்று போற்றிஇப்
    பொய்வேட மிகுதிகாட்டிப்
  பொறையறிவு துறவீதல் ஆதிநற் குணமெலாம்
    போக்கிலே போகவிட்டுத்
தன்னிகரி லோபாதி பாழ்ம்பேய் பிடித்திடத்
    தரணிமிசை லோகாயதன்
  சமயநடை சாராமல் வேதாந்த சித்தாந்த
    சமரச சிவாநுபூதி
மன்னவொரு சொற்கொண் டெனைத்தடுத் தாண்டன்பின்
    வாழ்வித்த ஞானகுருவே
  மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
    மரபில்வரு மௌனகுருவே.
 1. 
'அறுவகைச்'. சிவஞானசித்தியார், மங்கலவாழ்த்து.  
 ". 
'யாதொரு'. சிவஞானசித்தியார், 2. 2 - 22.