கானகம் இலங்குபுலி பசுவொடு குலாவும்நின் | கண்காண மதயானைநீ | கைகாட்ட வுங்கையால் நெகிடிக் கெனப்பெரிய | கட்டைமிக ஏந்திவருமே | போனகம் அமைந்ததென அக்காம தேனுநின் | பொன்னடியில் நின்றுசொலுமே | புவிராசர் கவிராசர் தவராச ரென்றுனைப் | போற்றிசய போற்றிஎன்பார் | ஞானகரு ணாகர முகங்கண்ட போதிலே | நவநாத சித்தர்களும்உன் | நட்பினை விரும்புவார் சுகர்வாம தேவர்முதல் | ஞானிகளும் உனைமெச்சுவார் | வானகமும் மண்ணகமும் வந்தெதிர் வணங்கிடும்உன் | மகிமையது சொல்லஎளிதோ | மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் | மரபில்வரு மௌனகுருவே. |