பாட்டளி துதைந்துவளர் கற்பகநல் நீழலைப் | பாரினிடை வரவழைப்பீர் | பத்மநிதி சங்கநிதி இருபாரி சத்திலும் | பணிசெய்யுந் தொழிலாளர்போல் | கேட்டது கொடுத்துவர நிற்கவைப் பீர்பிச்சை | கேட்டுப் பிழைப்போரையுங் | கிரீடபதி யாக்குவீர் கற்பாந்த வெள்ளமொரு | கேணியிடை குறுகவைப்பீர் | ஓட்டினை எடுத்தா யிரத்தெட்டு மாற்றாக | ஒளிவிடும் பொன்னாக்குவீர் | உரகனும் இளைப்பாற யோகதண் டத்திலே | உலகுசுமை யாகவருளால் | மீட்டிடவும் வல்லநீ ரென்மனக் கல்லையனல் | மெழுகாக்கி வைப்பதரிதோ | வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற | வித்தகச் சித்தர்கணமே. |