பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


158


எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும்என்
    இதயமும் ஒடுங்கவில்லை
  யானெனும் அகந்தைதான் எள்ளளவு மாறவிலை
    யாதினும் அபிமானம்என்
சித்தமிசை குடிகொண்ட தீகையொ டிரக்கமென்
    சென்மத்து நானறிகிலேன்
  சீலமொடு தவவிரதம் ஒருகனவி லாயினுந்
    தெரிசனங் கண்டும்அறியேன்
பொய்த்தமொழி யல்லால் மருந்துக்கும் மெய்ம்மொழி
    புகன்றிடேன் பிறர்கேட்கவே
  போதிப்ப தல்லாது சும்மா இருந்தருள்
    பொருந்திடாப் பேதைநானே
அத்தனை குணக்கேடர் கண்டதாக் கேட்டதா
    அவனிமிசை யுண்டோசொலாய்
  அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
    ஆனந்த மானபரமே.
     (பொ - ள்) "எத்தனை . . . நானறிகிலேன்" - (இறைவனூல்கள் அல்லாமல் உலக நூல்களை) எத்துணை வகையாகக் கற்றாலும், எவ்வளவு பேரிடத்தில் கேட்டாலும் எளியேன் உள்ளமானது ஒடுங்கும் நிலைமையில் இல்லை; (உள்ளம் ஒடுங்காதாகவே) யான் எனது என்னும் செருக்கு எள்ளளவும் மாறவில்லை; கண்டபொருள் எவற்றினும் ஆய்வின்றி உள்ளம் சென்று நீங்காது பற்றும் கடும்பற்று எளியேன் எண்ணத்தின்கண் குடிகொண்டாள்கின்றது; (பற்றுக் குடிகொண்டமையால்) பிறப்பின் பயனாகிய ஈகையினையும், (அதற்கு வேண்டும் வித்தாகிய) இரக்கத்தினையும், எளியேன் பிறந்தநாள் தொட்டு இதுகாறும் யான் அறிந்திலேன்;

    "சீலமொடு . . . சொலாய்" - (நன்னெறியிற் குறிக்கப்படும் நற் செய்கையாகிய) நடைமுறை ஒழுக்கமாகிய சீலத்தையும், (அதனால் பெறப்படும்) நோன்பு, தவம் முதலிய நல்லொழுக்கங்களையும், (எளியேன் நனவில் நசைகொண்டு செய்யாவிடினும்) கனவிலேனும் செய்ததாகக் கனாக்கண்டதும் அறியேன்; (பிறர்க்கும் பிறவுயிர்கட்கும் துன்பமே விளைக்கும்) பொய்ம்மொழிகளையே பொருந்தச் சொல்லும் புன்மையல்லாது, அருமையாக மருந்துக்குங்கூட ஒரு மெய்ம்மொழி புகன்றறியேன்; பிறர் மெச்சிக்கேட்கும்படி வியப்புற விரித்துவிரித்துப் போதிப்பதல்லாமல் (அப் போதனை வழி நின்று மனமடங்கி) முனைப்புச் செயலற்றுச் சும்மாயிருந்து, உன்னுடைய திருவருளினைப் பொருந்தும் புண்ணியப்பேறில்லாத அறிவில்லாத ஒருவன் யானேயாவன்; (எளியேனைப்போன்ற) அத்துணைக் குணக்கேடர் உளரெனக் கண்டதாகவோ