எக்கால முந்தனக் கென்னவொரு செயலிலா | ஏழைநீ என்றிருந்திட் | டெனதாவி யுடல்பொருளும் மௌனியாய் வந்துகை | ஏற்றுநம தென்றஅன்றே | பொய்க்கால தேசமும் பொய்ப்பொருளில் வாஞ்சையும் | பொய்யுடலை மெய்யென்னலும் | பொய்யுறவு பற்றலும் பொய்யாகு நானென்னல் | பொய்யினும் பொய்யாகையால் | மைக்கா லிருட்டனைய இருளில்லை இருவினைகள் | வந்தேற வழியுமில்லை | மனமில்லை யம்மனத் தினமில்லை வேறுமொரு | வரவில்லை போக்குமில்லை | அக்காலம இக்கால மென்பதிலை எல்லாம் | அதீதமய மானதன்றோ | அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி | ஆனந்த மானபரமே. |