உணர்த்துமுறை அதிட்டானமுறை யென்றும், ஆவேசமுறையென்றும் இருவகைப்படும். இவற்றுள் அதிட்டானமுறை ஆருயிரின் அகத்தே முதல்வன் நின்று செவ்விய அவ்வுயிரைக் கருவியாகக் கொண்டுரைத்தல். ஆவேசபக்கம் அம் முதல்வன் அவ் வுயிரின் புறத்துமேல் நின்று தானேயுரைத்தல். இதனை வருமாறுணர்க :
| ஆனேற்றை மேய்த்த வதிட்டானம் ஆவேசம் |
| ஆனேற்றை யூர்வ தறி. |
ஆசையற்றவர்களே சிவனடியுறைவர் என்னுமுண்மை "ஆசையறு மின்கள்" (பக்கம், 86) என்னும் திருமந்திரத்தானுணர்க
மூச்சடக்கும் முறையால் முதல்வன் அருளொளி அகத்தே தோன்ற இன்பமெய்தும், அல்லாதது துன்பமாம். இவ்வுண்மை வருமாறுணர்க :
| "காற்றினை மாற்றிக் கருத்தைக் கருத்தினில் |
| ஆற்றுவ தாற்றலென் றுந்தீபற |
| அல்லாத தல்லாதென் றுந்தீபற" |
| - திருவுந்தியார், 22 |
மெய்யடியார்கள் தன்னைமறந்து தலைவனை நினைந்து தலைவன் ஆட்ட ஆடுதலால் அவர்கள் உலகோரால் பேய்த்தொடக்குற்றார் எனப் பேசப்படுவர். இவ்வுண்மை வருமாறு :
| "சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப" |
| - 8. போற்றி - 18. |
| "சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்ப |
| தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப |
| நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப |
| நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப |
| பாடக மெல்லடி யார்க்கு மங்கை |
| பங்கினன் எங்கள் பராப ரனுக்கு |
| ஆடக மாமலை அன்ன கோவுக் |
| காடப்பொற் சுண்ணம் இடித்து நாமே." |
| - 8. பொற். 7. |
(6)
அரும்பொனே மணியேஎன் அன்பேஎன் அன்பான | அறிவேஎன் அறிவிலூறும் | ஆனந்த வெள்ளமே என்றென்று பாடினேன் | ஆடினேன் நாடிநாடி | விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் | மெய்சிலிர்த் திருகைகூப்பி | விண்மாரி எனஎனிரு கண்மாரி பெய்யவே | வேசற் றயர்ந்தேனியான் |