ஏனைத் தேவர் அனைவர்களும் பிறந்திறக்கும் பெற்றியர் என்னும் உண்மையினை வருமாறு காணக்:
"நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண - ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே."
- 5. 100 - 3.
இறைவன் ஆருயிர்களின் மாட்டு வைத்த அந்தண்மையால் உடனாய் நின்று, செவ்வி நோக்கி அறிவித்தருளுகின்றனன். எந்த நிலையிலும் அவன் அறிவித்தருளாவிட்டால் ஆருயிர்கள் ஏதும் அறியா. இவ்வுண்மை வரும் தனித்தமிழ்ச் சிவஞானபோத முழுமுதல் நூலான் உணர்க:
"அறிவிக்க அன்றி அறியா உளங்கள்1
செறியுமாம் முன்பின் குறைகள் - நெறியிற்
குறையுடைய சொற்கொள்ளார் கொள்பவத்தின் வீடென்
குறைவில்சகன் சூழ்கொள் பவர்க்கு."
- சிவஞானபோதம், 8. 2 - 2.
மேலும் வரும் செந்தமிழ்த் திருமாமறை முடிபானுமுணர்க: