வேதமுடன் ஆகம புராணமிதி காசமுதல் | வேறுமுள கலைகளெல்லாம் | மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே | விரிவா யெடுத்துரைக்கும் | ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை | உண்டுபணு ஞானமாகும் | ஊகம்அனு பவவசன மூன்றுக்கும் ஒவ்வுமீ | துலகவா திகள்சம்மதம் | ஆதலி னெனக்கினிச் சரியையா திகள்போதும் | யாதொன்று பாவிக்கநான் | அதுவாதலா லுன்னை நானென்று பாவிக்கின் | அத்துவித மார்க்கமுறலாம் | ஏதுபா வித்திடினும் அதுவாகி வந்தருள்செய் | எந்தைநீ குறையுமுண்டோ | இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி | எங்குநிறை கின்றபொருளே. |