பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

227
     (வி - ம்.) தமர் - சுற்றத்தார். தாரம் - வாழ்க்கைத்துணையாகிய மனைவி. சதுரங்கசேனை - நால்வகைப்படை. அவை யானை, தேர், குதிரை, காலாள் என்பன. உலோபம் - இவறன்மை; ஈய மன மில்லாமை.

     தந்தைதாய் முதலிய உறவும், மாடமாளிகை முதலிய செல்வங்களும், நால்வகைப்படையோடு கூடிய வேந்தராட்சியும், பிறவும் தம்முடைய உடைமை என்றும் தமக்கே உரியவென்றும் மாறுபட நினைந்து செருக்கித் தருக்கல் பிறப்பிற் கேதுவாகும், அங்ஙனமில்லாமல் திருவருளால் மெய்ம்மையோர்ந்து அவையனைத்தும் முதல்வனுக்கே முழுவுரிமையுடைய அடிமையும் உடைமையுமா மென்றும், அவன் திருவருளால் அவன் திருவடியைச் சேர்ந்துய்யும் வழியினுக்கு வழித் துணையாக நமக்கு அவனால் அருளப்பட்ட துணைப்பொருள்கள் என்றும் நாமும் அவனுக்கு அடிமையென்றுங்கொண்டு செருக்கற்று அடிதொழுவார் பிறப்பற்றுச் சிறப்புறுவர். அவ்வளவேயன்றி வெறுப்புக்குரியவை யல்லவென்க.

     இவ்வுண்மையினை வருமாறுணர்க :

"தந்தையார் தாயாரு டன்பி றந்தார்
    தாரமார் புத்திரரார் தாந்தா மாரே1
 வந்தவா றெங்ஙனே போமா றேதோ
    மாயமா மிதற்கேது மகிழ வேண்டா
 சிந்தையீ ருமக்கொன்று சொல்லக் கேண்மின்
    திகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ் சென்னி
 எந்தையார் திருநாம நமச்சி வாய
    என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே."
- 6. 94 - 10.
(3)
 
ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல்விசை
    அடங்கி மனம்வீழநேரே
  அறியாமை யாகின்ற இருளகல இருளொளியும்
    அல்லா திருந்தவெளிபோல்
கோடா தெனைக்கண் டெனக்குள்நிறை சாந்தவெளி
    கூடிஇன் பாதீதமுங்
  கூடினே னோசரியை கிரியையில் முயன்றுநெறி
    கூடினே னோஅல்லன்யான்
 
 1. 
1. 'நானாரென்.' 8. திருக்கோத்தும்பி - 2'நாடியோ' சிவஞானபோதம், 9. 1 - 1.