பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

232
முதலொலியாகிய நாதத்தை இயக்குவிக்கும் திருவருள் ஒலி, இவ்வொலி உணர்விலுறுவதன்றி உறுப்பிலுறுவதன்று. மேலும் இஃது உன்னாமல் உன்னும் உரைமந்திரம்; இஃது உடலினின்று வெளிப்போந்த உயிரினை மீண்டும் வருவித்து அவ்வுடலை எழச்செய்வதாம்.

     அசபா உண்மையினை வருமாறுணர்க :

"போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
 தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
 சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை1
 ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே."
- 10. 864.
     குறிக்கோளுடன் வாழ்தல் வேண்டும். அக் குறிக் கோளினையும் முதல்வரே உணர்த்தியருள வேண்டும். அவ்வுண்மை வருமாறு :

"பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம்
 மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்புவந்து
 கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோளி லாதுகெட்டேன்
 சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்துளானே."
- 4. 67 - 9.
"கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம்
 ஒருவ னேயுயிர்ப் பாயுணர் வாய்நின்ற
 திருவ னேதிரு வீழி மிழலையுள்
 குருவ னேயடி யேனைக் குறிக்கொளே."
- 5. 13 - 5.
(6)
 
ஆரா ரெனக்கென்ன போதித்தும் என்னஎன்
    அறிவினை மயக்கவசமோ
  அண்டகோ டிகளெலாங் கருப்பஅறை போலவும்
    அடுக்கடுக் காஅமைத்துப்
பேராமல் நின்றபர வெளியிலே மனவெளி
    பிறங்குவத லாதொன்றினும்
  பின்னமுற மருவாது நன்னயத் தாலினிப்
    பேரின்ப முத்திநிலையுந்
 
 1. 
'உணர்வினேர்பெற'. 12. சம்பந்தர் - 161.