மின்போலும் இடையொடியும் ஒடியுமென மொழிதல்போல் | மென்சிலம் பொலிகளார்ப்ப | வீங்கிப் புடைத்துவிழு சுமையன்ன கொங்கைமட | மின்னார்கள் பின்ஆவலால் | என்போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் | இருவர்களில் ஒருவருண்டோ | என்செய்கேன் அம்மம்ம என்பாவம் என்கொடுமை | ஏதென் றெடுத்துமொழிவேன் | அன்பால் வியந்துருகி அடியற்ற மரமென்ன | அடியிலே வீழ்ந்துவீழ்ந்தெம் | அடிகளே யுமதடிமை யாங்களெனு நால்வருக் | கறமாதி பொருளுரைப்பத் | தென்பாலின் முகமாகி வடவா லிருக்கின்ற | செல்வமே சத்தாகிஎன் | சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே | தேசோ மயானந்தமே. |