பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

285
பொருள் ஆகிய எல்லாவற்றினும் பிரிப்பிலதாய். அந்தண்மை மிக்க திருவருளே உறையுங்கோயிலாய் உள்ள மிகப்பெரிய முதற்பொருளை நீ பெற்றுய்ய விரும்பின் ;

     "நெறியாகக் . . . என்றே" - அவ்விருப்பம் நிறைவேறுவதற் குரிய வழிமுறைகளைச் சொல்லுவேன் கேட்பாயாக எந்நாளிலும் மாயா காரியமாகிய முக்குணமில்லதாய் உனக்கு உள்ளம் வாய்த்து எந்நாளும் ஒன்றுபோல் வாழக்கடவை, உன்னைப் பண்டேபுல்லிய மல நோய் அனைத்தும் விட்டுவிலகும்படி திருவருளால் பேரறிவுப் பேரின்பம் பெற்று வாழக்கடவை, பிறவிப்பிணிப்பு முற்றும் நீங்குக என்று சொல்லுக.

     (வி - ம்.) 'நிர்க்குணம்' என்பது மாயாகாரியமாகிய முக்குணமில்லை யென்பதாம். ஆனால், தன்வயத்தன் முதலாகச் சொல்லப்படும் திருவருட்குணம் எட்டும் சிவபெருமானுக்கு உள்ளன. இவ்வுண்மைகளனைத்தும் மெய்ந்நூல்களில் வரும் செய்யுட்கள் கொண்டுணர்ந்து கொள்க! "அறிவித்தாலன்றி அறியாவுளங்கள்" என்பதனால் முதல்வன் தானே தனித்தறியுந்தன்மையன், அவன் அறிவித்தாலன்றி ஆருயிர்கள் யாண்டும் அறியா என்பதாம்.

     சிவனையடைய வெளியே பூசையுறுப்புகளளைத்தும் தொகுத்துக் கொண்டு வழிபடுவது போன்று அகத்தே அவ்வனைத்தையும் அன்பினால் கற்பித்துக் கொண்டு வழிபடுதல் வேண்டும். அவ்வழிபாட்டால் சித்தமலமறும். சிவன் குருவடிவிற் றோன்றிச் சிவமாக்கித் திருவடிக் கீழ்வைத்து ஆண்டு கொள்வன்.

(19)
 
பந்தமறும் மெய்ஞ்ஞான மான மோனப்
    பண்பொன்றை அருளியந்தப் பண்புக் கேதான்
சிந்தையில்லை நானென்னும் பான்மை யில்லை
    தேசமில்லை காலமில்லை திக்கு மில்லை
தொந்தமில்லை நீக்கமில்லை பிரிவு மில்லை
    சொல்லுமில்லை இராப்பகலாந் தோற்ற மில்லை
அந்தமில்லை ஆதியில்லை நடுவு மில்லை
    அகமுமில்லை புறமுமில்லை அனைத்து மில்லை.
     "பந்தமறு . . . திக்குமில்லை" - மும்மலப்பிணிப்பாகிய பந்தம் அறும்பொருட்டுத் திருவடியுணர்வான பேசா மூதறிவுப் பண்பு சிவகுருவால் விளக்குவித்தது விடத்து, அப் பண்பினுக்கு (சிவவுணர்வையன்றி) வேறு எவ்வகையான நாட்டமுமில்லை; நானென்று முனைக்கும் முனைப்பு மில்லை, வரையறுக்கப்பட்ட இடமில்லை, காலமில்லை, குறித்தவொரு திசையுமில்லை;

     "தொந்தமில்லை . . . அனைத்துமில்லை" - உலகியற்றொடர்பு ஒன்றுமில்லை, திருவடியை விட்டு நீங்கும் நிலைமையில்லை; வேறென ஒன்று தோன்றுவதில்லை; (நினைப்புமறப்பு இன்மையின், இரவு பகலென்னும்