பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

327
வெளிக்குள்ளே திருவருள் நிலையினை அமைத்து வைத்தேன். திருவருட்பேரொளியே! நீ எளியேன் நெஞ்சத்து நின்றருளிய அருட்டன்மைக்கு ஒப்பு ஏதுமின்றும்.

     (வி - ம்.) சிவகுருவின் செவியறிவுறூஉ வால், (உபதேசம்) அருளினை அடைவர். அவர் நெஞ்சம் அருளிலேயே அழுந்தியிருக்கும். அலுவலர் நெஞ்சம் அவ்வலுவலின்கண் அழுந்திடுவது இதற்கொப்பாகும். சிவபெருமானே! நீ எல்லாப் பொருள்கட்கும் பொதுமையில் நின்றருள்கின்றனை. நன்னெறியாளர் நெஞ்சில் திருவருளே வெளிப்பட்டு நின்றருளும். இவ்வுண்மை வருமாறு :

"முன்னெஞ் சம்மின்றி மூர்க்கராய்ச் சாகின்றார்
 தந்நெஞ் சந்தமக் குத்தா மிலாதவர்
 வன்னெஞ் சம்மது நீங்குதல் வல்லீரே
 என்னெஞ்சி லீசனைக் கண்டதெ னுள்ளமே."
- 5. 98 - 6.
"அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
 நீயெமக் காகா தது"
- திருக்குறள், 1291.
(9)
 
வைத்த தேகம் வருந்த வருந்திடும்
பித்த னானருள் பெற்றுந் திடமிலேன்
சித்த மோன சிவசின்ம யானந்தம்
வைத்த ஐய அருட்செம்பொற் சோதியே.
     (பொ - ள்) (உயிர் உடலோடு ஒட்டிவாழ்வதால் உடலுக்கு வருந்துன்பினைத் தன்னதாகக் கொண்டு வருந்தும்; திருவருளால் உண்மையுணர்ந்தார் ஒரு சிறிதும் வருந்தார்) பேரொளிப் பிழம்பே! மயக்கந்தெளியாத பித்தனாகிய அடியேன், திருவருளால் என்பால் வைக்கப்பட்ட உடல் வருந்த யானும் வருந்துகின்றேன். நின் திருவருள் பெற்றும் உள்ளம் உறுதிப்பாடில்லாதவனாயினேன். கைகூடப்பெற்ற உரையற்ற அழிவில்லாத பேரறிவுப் பேரின்பப் பேற்றினை அடியேன் பால் வைத்தருளிய திருவருட் செம்பொன் ஒளியே.

(10)
 
செம்பொன் மேனிச் செழுஞ்சுட ரேமுழு
வம்ப னேனுனை வாழ்த்து மதியின்றி
இம்பர் வாழ்வினுக் கிச்சைவைத் தேன்மனம்
நம்பி வாவெனின் நானென்கொல் செய்வதே.
     (பொ - ள்) (சிவனெனு நாமந் தனக்கேயுடைய செம்மேனி எம்மானாதலின்) செம்பொன்போற் றிகழ்கின்ற திருமேனியினையுடைய செழுமையான ஒண்சுடரே! முற்றும் பொல்லாப் புன்மையனாகிய எளியேன், நின் திருவடியிணையினை வாழ்த்தும் நல்லறிவின்றி,