(பொ - ள்.) (அனைத்துலகமும் நிலையாமைத் தன்மையின் மின்னலை யொத்தே காணப்படும்) மின்னலைப் போன்று எல்லாவுலகமும் நின்று மறையும் நிலையாமையையுடையன. இவ்வுண்மையினை நூலுணர்வானும் நுண்ணுணர்வானும் அறிதற்குரியாரை அடுத்து அறிந்தவர் நின் திருவடிப்பேறு போன்று நல்ல மேலாம் பொருள் வேறொன்றும் இல்லையென்று ஆராய்ந்தறிந்தவர்க்குப் பொன்போல் சுடர்ந்து விளங்கும் நின் மூதறிவு கொண்டு உன் திருவடிப்பணியினைப் பொருந்தும் நற்றவமில்லாத எளியேனைப் போன்ற பேதையர் வேறு எவர்? ஐயனே! (எவரும் இலர் என்பதாம்.)