பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

412
வருவதற்குக் காரணம் யாது? யான் என்னும் முனைப்பாகிய அகங்காரம் தோன்றுவதற்குக் காரணம் யாது? புகன்றருள்வாயாக. (ஊழ்வினைத்தாக்கு வருங்கால் ஒரோ வழி இங்ஙனம் நேர்தலும் உண்டு. அந்நிலையிலும் திருவடி நினைவே மேம்பட்டெழுதல் வேண்டுமென்பதே இவ் விண்ணப்பக் குறிப்பாகும்.)

(15)
மின்னை யன்னபொய் வாழ்க்கையே நிலையென மெய்யாம்
உன்னை நான்மறந் தெவ்வணம் உய்வணம் உரையாய்
முன்னை வல்வினை வேரற முடித்தென்று முடியாத்
தன்னைத் தன்னடி யார்க்கருள் புரிந்திடும் தக்கோய்.
    (பொ - ள்.) மின்னலைப்போன்று தோன்றி மறையுந் தன்மை வாய்ந்த நிலையாமை எனப்படும் இவ்வுலகப் பொய் வாழ்க்கையினையே நிலையாம் மெய்யெனக் கருதி, என்றும் தோற்றக்கேடுகளில்லாத நிலையாகவுள்ள மெய்யாம் நின்திருவடியினை அடியேன் மறந்து எவ்வகையாக உய்வேன்? உய்யும் வகையினை உரைத்தருள்வாயாக. ஆருயிர்களின் பண்டை வல்வினைகளின் வேரற்றுப் போம்படி திருநோக்கால் அருளி, ஒருகாலத்தும் முடிவெய்தாது நிலைத்திருக்கும் தன்னைத் தன் மெய்யடியார்களுக்குக் கொடுத்தருளும் தகுதியான் மிக்கோனே!

(16)
எம்ப ராபா எம்முயிர்த் துணைவஎண் றிறைஞ்சும்
உம்பர் இம்பர்க்கும் உளக்கணே நடிக்கின்றாய் உன்றன்
அம்பொன் மாமலர்ப் பதத்தையே துணையென அடிமை
நம்பி னேன்இனிப் புரப்பதெக் காலமோ நவிலாய்.
    (பொ - ள்.) எம்முடைய முழுமுதலே! எம் ஆருயிர்த்துணையே என்று இடையறாது படர்ந்து பாடிப்பணிகின்ற சிவவுலகின்கண் வாழ்வார்க்கும், அது போன்று இவ்வுலகின்கண் வாழ்வார்க்கும் அவரவர் தூயவுள்ளத்தின்கண்ணே நடித்தருள்கின்ற உன்னுடைய அழகிய பொன்போலும் திருவடித் தாமரையினையே உற்ற துணையென அடிமை நம்பி நும்பின் நிற்கின்றேன். இனிமேல் அடியேனைக் கை கொடுத்துக் காத்தருள்வது எந்நாளோ? திருவாய்மலர்ந்தருள்வாயாக. இறைவனை நண்ணினாரை வினை நண்ணா என்னும் வாய்மை வருமாறு :-

"விண்ணு ளாரும் விரும்பப் படுபவர்
 மண்ணு ளாரும் மதிக்கப் படுபவர்
 எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை
 நண்ணி னாரைநண் ணாவினை நாசமே"
- 5. 14. 7
(17.)
பாடி யாடிநின் றிரங்கிநின் பதமலர் முடிமேல்
சூடி வாழ்ந்தனர் அமலநின் னடியர்யான் தொழும்பன்