(பொ - ள்.) விண்ணுலகத்திறைவனே, ஆண்டு வாழும் விண்ணவர்க்கும் முதல்வனே. இன்பவளமிகுந்த மூதறிவுத் தலைவனே! நான்கு வேதங்கட்கும் நாகனே, நன்மை நிறைந்த மெய்யுணர்வு கைவந்த நிலைகாட்டும் பேச்சற்ற மௌன நிலைக்கும் வேந்தனே, நின் திருவடிக் கண் அன்பில்லாமல் முழுவதும் அறிவில் ஏழையாய் நெஞ்சம் நொந்தழியவோ? எளியேன் என் செய்வேன்? இரங்கி இசைத்தருள்வாயாக. அனைத்திற்கும் முதல்வன் சிவன் என்னும் உண்மை வருமாறு :
| "வேத நாயகன் வேதியர் நாயகன் |
| மாதின் நாயகன் மாதவர் நாயகன் |
| ஆதி நாயகன் ஆதிரை நாயகன் |
| பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே." |
| - 5. 100 - 1 |
20.
ஏத மற்றவர்க் கின்பமே பொழிகின்ற இறையே | பாத கக்கருங் கல்மனங் கோயிலாப் பரிந்து | சூத கத்தனா யாதினும் இச்சைமேல் தோன்றும் | வாத னைக்கிட மாயினேன் எவ்வணம் வாழ்வேன். |
(பொ - ள்.) குற்றம் ஒருசிறிதும் இல்லாத குணப்பெருங் குன்றனார்க்குப் பேரின்பமே பொழிந்தருள்கின்ற முதல்வனே! பாவம் மிகுந்த கருங்கல்லையொத்த எளியேன் உள்ளம் நினக்குரிய கோயிலாக (இருக்கவும்) யான் அந்நிலைக்கு மாறாக வஞ்சனைமிகுந்த மனமுடையனாய், எப்பொருளிலும் அவாவினையே மிகுதியாகத் தோற்றுவிக்கின்ற துன்பத்திற்கு நீங்கா இடமாயினேன்; இந்நிலையில் அடியேன் எவ்வண்ணம் உய்யப் போகின்றேன்!
(21)
தெளிவொ டீகையோ அறிகிலான் அறிவிலான் சிறிதும் | அளியி லான்இவன் திருவருட் கயலென அறிந்தோ | எளிய னாக்கினை என்செய்வேன் என்செய்வேன் எல்லா | ஒளியு மாய்நிறை வெளியுமாய் யாவுமாம் உரவோய். |
(பொ - ள்.) எல்லா ஒளிகளுக்கும் ஒளி கொடுத்துக்கொண்டிருக்கும். இயற்கைப் பேரொளியே, யாண்டும் நிறைந்த அருட்பெரு வெளியாய், கலப்பினால் எல்லாப் பொருளுமாய் நிற்கும் திண்மையனே, 1 எளியேனைத் தெளிவில்லாதவன், ஈகையில்லாதவன், அறிவில்லாதவன், சிறிதும் கண்ணோட்டமாகிய இரக்கமில்லாதவன் எனத் திருவுள்ளங்கொண்டு புறம்பென்று தள்ளிவிட்டனை, அங்ஙனம் தள்ளிவிடின் அடியேன் என் செய்வேன்.
(22)
கண்ணி னுள்மணி யென்னவே தொழும் அன்பர் கருத்துள் | நண்ணு கின்றநின் அருளெனக் கெந்தநாள் நணுகும் |
1. | 'உலகினை' சிவஞானசித்தியார், 1. 2 - 20. |