| ஒத்துடன் உதித்து நில்லா துதியாதும் நின்றி டாது |
| வைத்திடும் தோற்றம் நாற்றம் மலரினில் வருதல் போலும்." |
| - சிவஞானசித்தியார், 7 - 3.1. |
(22)
குருலிங்க சங்கமமாக் கொண்டதிரு மேனி | கருவொன்று மேனிநம்பாற் காட்டா - தருளென்று | கண்டவர்க்கே ஆனந்தங் கண்டுகொள லாம்அலது | கொண்டவர்க்கிங் கென்னகிடைக் கும். |
(பொ - ள்.) ("பிறவாயாக்கைப் பெரியோனாம்" சிவபெருமான், ஆருயிர்கள் உய்யும்பொருட்டுத் திருவருளால் திருமேனி கொண்டருள்வன். மெய்யுணர்வு கைவந்தாரை மேற்கொண்டும் எழுந்தருள்வன்; திருவெண்ணீறு முதலிய தன் திருவுருவைத் தான் கொடுத்து எழுந்தருள்வன்; எல்லாம் அவன் நண்மயமே.) ஆட்கொள்ளுபொருட்டுச் சிவகுருவாகவும், திருக்கோவிலிலுள்ள முதலிடங்களிற் காணப்படும் சிவக்குறியாகவும், அகத்தே செந்தமிழ்த் திருவைந்தெழுத்து அதன் குறியாகப் புறத்தே திருவெண்ணீறும் கண்டிகையாகிய சிவமணியும் நீங்காது பூண்டியங்கும் சிவனடியராகவும் திருமேனி கொண்டருள்வன்; நாம் அத் திருமேனிகளைப் பிறப்பிற்பட்ட திருமேனி என்று கண்டு கொள்ளாது திருவருளென்று மெய்ம்மையாகக் கண்டவர்க்கே திருவடிப்பேரின்பம் கண்டுணரலாகும்; அங்ஙனங் கொள்ளாது ஏனையார் போன்று கருவுட்பட்டாரெனக் கொண்டார்க்கு இவ்வுலகில் யாது கைகூடும்? ஏதுமின்றாம்.)
(வி - ம்.) ஆசானை மாணவரும் மருத்துவனை நோயாளரும் ஏனையார் போன்ற இயல்பினரே இவர்களும் என்று எண்ணுவரேல், அறிவு விளங்கும் பயனையும், நலம் மேற்கொள்ளும் பயனையும் இழந்து விடுவரன்றோ? அம்மட்டோ? முறையே அறியாமையாலும், நோயாலும் துன்பமும் பெருகி வருந்துவர். சிவத்திருக்கோலத்தினைச் சிவனெனவே கண்ட மெய்ப்பொருள்நாயனாரும், ஏனாதிநாத நாயனாரும் திருவடி யின்பம் எய்தியமையைத் திருத்தொண்டர் புராணத்துட் காண்க.
லிங்கம் - சிவலிங்கம். சங்கமம் - சிவனடியார்.1
(23)
புலியின் அதளுடையான் பூதப் படையான் | பலியிரந்தும் எல்லாம் பரிப்பான் - மலிபுனல்சேர் | பொன்முடியான் முக்கட் புனிதன் சரண்புகுந்தோர்க் | கென்முடியா தேதுமுள தே. |
(பொ - ள்.) (சிவபெருமான்) புலித்தோலை ஆடையாக உடுத்தவன்; பூதங்களைப் படையாகவுடையவன்; மெய்யன்பர் நயந்து நல்கும் உள்ளன்பினைப் பலியாக ஏற்றருள்பவன்; எல்லாவற்றையும் திருவருள் வெளியில் தாங்குபவன்; மிக்க புனல் சேர்ந்துள்ள அழகிய பொன்
1. | 'செம்மலர்.' சிவஞானபோதம். நூற்பா, 12. |