பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

47

புந்திமகி ழுறநாளுந் தடையறவா னந்தவெள்ளம்
    பொலிக என்றே
வந்தருளுங் குருமௌனி மலர்த்தாளை அநுதினமும்
    வழுத்தல் செய்வாம்.
     (பொ - ள்.) 'இந்திரசா . . . சார்ந்து வாழ்க' - (மாயையின் காரியமாகிய) இவ்வுலகமானது, மாயவித்தையும், கனவு நிலையும், பேய்த் தேரும்போல அடியேனுக்குத் திருவருளால் தோன்றும்படியும் எப்பொழுதும் பேரறிவுப் பெரும்பொருளாம் முதல்வனால் அழிவுபாடில்லாத தானே மேலாம் திருவடியைச் சார்ந்து பெருவாழ்வுறவும்;

     'புந்திமகி . . . . . . வழுத்தல் செய்வாம்' - (திருவருளால்) அடியேனுடையே மெய்யுணர்வு மிக்க களிப்புறுமாறு, எந்நாளும் ஏதும் தடையின்றிப் பேரின்பப் பெருவெள்ளம் பெருக்கெடுத்துப் பொலிகவென்று புணர்க்கவும், தண்ணளியால் எழுந்து வந்தருளும், வாய்வாளாமையாகிய மௌன குருமணியின் செம்மலர்போலும் நோன்தாளை நாடொறும் காதலால் உள்கியும், கனிவால் வழுத்தியும், களிப்பால் கைகூப்பியும் தொழுதல் செய்வாம்.

     (வி - ம்.) இந்திரசாலம் - கண்கெட்டுமாயம். கனவு - சொப்பனம். கானல் நீர் - பேய்த்தேர். சந்ததமும் - எப்பொழுதும். சிற்பரம் - மேலாம் அறிவு. தற்பரம் - தானேமுதல். பொலிக - அழகு செய்க. அனுதினம் - நாடொறும்.

     'இந்திரசாலம், கனவு, கானலினீர்' முதலிய ஒப்புகள் உலகம் தோற்றமும் மாற்றமும் எய்துவதாகிய நிலையாமையைக் குறிப்பனவாகும். உலகம் இல்லாத கற்பனை என்னும் கருத்துடையனவன்று. இவ்வுண்மை வருமாறுணர்க:

"அசத்தறியாய் கேள்நீ அறிவறிந்த எல்லாம்
 அசத்தாகும் மெய்கண்டான் ஆயின் - அசத்தலாய்
 நீரில் எழுத்தும் நிகழ்கனவும் பேய்த்தேரும்
 ஓரின் அவை இன்றாமா றொப்பு."
- சிவஞானபோதம். 6. 1 - 1.
("நீரிலெழுத்துத் தோன்றியபொழுதே மறைந்து போதற்கும், கனாப்பொருள் முடிவுபெறுதலின்றி இடையே மறைந்து போதற்கும், அருஞ்சுரத்தின் முதுவேனிலின் நண்பகற் கடுமைபற்றித் தோற்றி ஞாயிற்றின் கிரணம் முகிற்படலத்தின் மறைந்தவழித் தானும் மறைந்து போவதாகிய பேய்த்தேர் ஒரு காரணம் காட்டி மறைந்து போதற்கும் உவமையாயின." சிவஞானமுனிவரனார் பேருரை.)

"மண்தனில் வாழ்வும் வானத் தரசயன் மாலார் வாழ்வும்
 எண்தரு பூத பேத யோனிகள் யாவும் எல்லாங்