பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

59

"ஏய்ந்த மாமல ரிட்டுமுட்
    டாததொர் இயல்பொடும் வணங்காதே
 சாந்த மார்முலைத் தையல்நல்
    லாரொடுந் தலைதடு மாறாகிப்
 போந்து யான்துயர் புகாவணம்
    அருள்செய்து பொற்கழ லிணைகாட்டி
 வேந்த னாய்வெளி யேயென்மு
    ளின்றதோர் அற்புதம் விளம்பேனே."
- 8. அற்புதப்பத்து - 2.
"பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
 நாக்கைக் கொண்டரன் நாம நவில்கிலார்
 ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
 காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே."
- 5. 90. 5.
     "போற்றிலார்" என்பது உடம்பொடுபுணர்த்த லென்னும் நூற்புணர்ப்பால் 'போற்றி போற்றி' எனப்புகலப்படும் தனித்தமிழ் மந்திரம் ஓதி ஒரு போற்றிக்கு ஒரு பூவாகத் தூவி வழிபடுதல் வேண்டு மென்பது நன்கு பெறப்படும்.

'அங்கமது புளகித்த லென்பதனை வருமாறுணர்க:
"மெய்தா னரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
 கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும் பியுள்ளம்
 பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங்
 கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே"
8. திருச்சதகம் - 1.
     சன்மார்க்க நெறியெனினும், சித்தாந்த நெறியெனினும், நன்னெறி எனினும் ஒன்றே.

     "பக்குவம்" என்பது மலச்செவ்வியினை. இதனை மலபரிபாக மெனவுங் கூறுப. இச் செவ்வி ஆண்டான் அடிமைத்திறம் வழுவாது, வேண்டுதல் வேண்டாமையில்லாமல், "ஏகனாகி இறைபணிநிற்" பார்க்கு நிகழும் இருவினை யொப்பால் வருவது. இச் செவ்வியினை நான்கு நிலையாகப் பகுத்துள்ளனர். அவை மிகுமந்தம், மந்தம், விரைவு, மிகுவிரைவு என்பன. (மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிர தரம்.)

     மிகுமந்த நிலையாவது அருவுருவத்திருமேனியாகிய சிவக்கொழுந்தினிடத்திலும், திருக்கோலத்திருவுருவங்களாகிய இருபத்தைந்து சிவ வடிவங்களிடத்திலும் ஒருவர்க்குப் பத்தியுண்டானவிடத்து அவரை ஆட்கொண்டருளுதற் பொருட்டுச் சிவகுரவனுக்குத் துணையாக