பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

61

     இவற்றுள் இறைவிரலாம் பெருவிரல் தன்னக நிலையால் ஏனை விரல்களை அகம்புறமாய்த் தழுவும். தன்னாற்றலால் ஏனைவிரல்கள் தன்னைப் புறந்தழுவவும் பண்ணும். அவ்விரல்கள் நான்கும் ஒன்று மற்றொன்றைப் புறமே தழுவும். இவை மலம் மூன்றும் ஆருயிரின் அகந்தழுவாது புறந்தழுவி நீங்கும் என்பதைக் குறிக்கும் குறிப்பாகும். இறைவன் அகம்புறந்தழுவுவது எள்ளில் எண்ணெய்போன் றெங்குமாய் நிற்பதைக் குறிக்கும். பெருவிரலும் சுட்டுவிரலும் அகந்தழுவி நிற்பதே ஆருயிர்ப் புணர்ப்பாம்.

பெம்மான் பெருவிரலாம் பேணும் அகம்புறமா
எம்மான்றாள் ஆவி இணைசுட்டே - மும்மாசு
நாடில்வினை மாயைமலம் நண்ணும் புறந்தழுவல்
கூடில்மலம் நீங்குங் குறி.
தென்முகக் கடவுளின் திருக்கோலம் சிவனார் திருக்கோலம் இருபத்தைந்தினுள் ஒன்று. திருச்சிராப்பள்ளியினைத் திரிசிரன் வழிபட்டு ஆண்டுவந்த திருவூரென்ப.

     ஆலமர் செல்வனை அடிவணங்கி உயர்ந்தாரை ஆட்கொள்ளும் வண்ணம் போன்று மிகவும் தாழ்வான அடியேனையும் ஆளாக்கி ஆட்கொள்ளுதல் வேண்டுமென விண்ணப்பித்துக் கொள்ளும் விண்ணப்பப் பரவுதலாகும்.

     'சிரிகிரி . . . குருவே' என்பதற்கு 'திருச்சிராப்பள்ளிக்கண்' என்பது முதல்மெய்க்குருமணியே என்பதுவரையுள்ளவுரையை யாண்டும் உரைத்துக் கொள்க.

(1)
ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவிநான்
    அத்துவித வாஞ்சையாதல்
  அரியகொம் பில்தேனை முடவன்இச் சித்தபடி
    ஆகும்அறி வவிழஇன்பந்
தாக்கும்வகை யேதிநாட் சரியைகிரி யாயோக
    சாதனம் விடுத்ததெல்லாஞ்
  சன்மார்க்க மல்லஇவை நிற்கஎன் மார்க்கங்கள்
    சாராத பேரறிவதாய்
வாக்குமனம் அணுகாத பூரணப் பொருள்வந்து
    வாய்க்கும் படிக்குபாயம்
  வருவித் துவட்டாத பேரின்ப மானசுக
    வாரியினை வாய்மடுத்துத்