ஒளவிய மிருக்கநா னென்கின்ற ஆணவம் | அடைந்திட் டிருக்கலோபம் | அருளின்மை கூடக் கலந்துள் ளிருக்கமேல் | ஆசா பிசாபமுதலாம் | வெவ்விய குணம்பல இருக்கஎன் னறிவூடு | மெய்யன்நீ வீற்றிருக்க | விதியில்லை என்னிலோ பூரண னெனும்பெயர் | விரிக்கிலுரை வேறுமுளதோ | கவ்வுமல மாகின்ற நாகபா சத்தினால் | கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை | கடிதகல வலியவரு ஞானசஞ் சீவியே | கதியான பூமிநடுவுட் | செவ்விதின் வளர்ந்தோங்கு திவ்யகுண மேருவே | சித்தாந்த முத்திமுதலே | சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே | சின்மயா னந்தகுருவே. |