(வி - ம்) பேயுரு1 வெய்துதற்குக் காரணம், தன்னை மறந்தமையால் உணவை வெறுத்து உடம்பு மெலிந்து வாடி எலும்பு தோன்ற நின்றமையாகும்.
(4)
அடக்கிப் புலனைப் பிரித்தே - அவ | னாகிய மேனியில் அன்பை வளர்த்தேன் | மடக்கிக்கொண் டான்என்னைத் தன்னுள் - சற்றும் | வாய்பேசா வண்ணம் மரபுஞ்செய் தாண்டி - சங்கர |
(பொ - ள்) திருவருளால் பொறி புலன்களையடக்கிக் குழைந்து, வேறு செய்திகளில் செல்லவொட்டாது முதல்வன் திருமேனியின் கண் பெருகும் அன்பினைப் பெருக்கினேன். அங்ஙனஞ் செய்யவே அப்பெருமான் அடியேனைத் தன்வயம் ஆக்கிக் கொண்டனன். மேலும் சிறிதும் அவனையன்றி வேறேதும் வாய் பேசாதபடியும் செய்தருளினன்.
(5)
மரபைக் கெடுத்தனன் கெட்டேன் - இத்தை | வாய்விட்டுச் சொல்லிடின் வாழ்வெனக் கில்லை | கரவு புருஷனும் அல்லன் - என்னைக் | காக்குந் தலைமைக் கடவுள்காண் மின்னே - சங்கர |
(பொ - ள்) தோழியே! அடியேன் நீண்ட நாள்களாகத் தொடர்பு கொண்டு வருகின்ற தத்துவக் கூட்டங்களின் உண்மையினை விளக்கும் மரபைக் கெடுத்து, அவற்றினின்றும் பிரித்து வைத்தனன். ஐயோ! கெடுவேன். இச் செய்தியை எளியேன் வாய்விட்டுச் சொல்லின் எனக்குப் பேரின்பப் பெருவாழ்வு இல்லாமற் போய்விடும். ஏழையேனின் தலைவன் வேற்றுக் கணவனும் அல்லன். என்னை எஞ்ஞான்றும் கைவிடாது காத்தருளும் கடப்பாட்டுத் தலைவனே. அவனே விழுமிய முழு முதல்வன். காண்பீர்களாக. மரபு - தொன்றுதொட்டு வரும் வழக்கு.
(6)
கடலின் மடைவிண்ட தென்ன - இரு | கண்களும் ஆனந்தக் கண்ணீர் சொரிய | உடலும் புளகித மாக - என | துள்ளமுருக உபாயஞ்செய் தாண்டி - சங்கர |
(பொ - ள்) ஏடீ! கடலின் மடை திறந்தது போன்று எளியேன் இருகண்களினின்றும் பேரின்பக் கண்ணீர்ப் பெருக்குச் சொரிய உடம்பின்கண் மயிர்க்கூச்செறிய, உள்ளமும் உருக வழிவகைகள் செய்தருளினன்.
(7)
உள்ளது மில்லது மாய்முன் - உற்ற | உணர்வது வாயுன் னுளங்கண்ட தெல்லாந் |
1. | 'கண்டவர்'. 12. காரைக்காலம்மையார் - 54. |
" | 'பெறினும்'. 11. " அற்புதம், 86. |