பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


73


     ஆருயிர் உலகிடை வந்தபின் வளர்ச்சியுற்றுப் பருவந் தோறும் பல்வேறு நிலையினை அடையும். அவ்வுண்மை வருமாறு:

23.
"பாளைப் பசும்பதத்தும் பாலனாம் அப்பதத்தும்
 நாளுக்கு நாட்சகல ஞானத்து - மூள்வித்துக்
 கொண்டாள ஆளக் கருவிகொடுத் தொக்க நின்று
 பண்டாரி யான படிபோற்றி."
- போற்றிப்பஃறொடை.
     முறைதிறம்பி அறம்வழுவி மறம்புரிந்த அறக்கொடியோரை அறக்கடவுளாகிய நமன் தண்டிக்கு முறைமை வருமாறு :

- தான்மாள
42.வெற்றிக் கடுந்தூதர் வேகத் துடன்வந்து
பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட-இற்றைக்கும்
இல்லையோ பாவி பிறவாமை என்றெடுத்து
நல்லதோர் இன்சொல் நடுவாகச்-சொல்லியிவர்
செய்திக்குத் தக்க செயலுறுத்து வீர்என்று
வெய்துற் றுரைக்க விடைகொண்டு-மையல் தருஞ்
45.செக்கி னிடைத்திரித்துந் தீவாயி லிட்டெரித்துந்
தக்கநெருப் புத்தூண் தழுவுவித்தும்-மிக்கோங்கு
நாராசங் காய்ச்சிச் செவிமடுத்தும் நாஅரிந்தும்
ஈராஉன் ஊனைத்தின்னன்றடித்தும்-பேராமல்
அங்காழ்நரகத் தழுத்துவித்தும் பின்னுந்தம்
வெங்கோபம் மாறாத வேட்கையராய்-இங்கொருநாள்
எண்ணிமுதற் காணாத இன்னற் கடுநரகம்
பன்னெடுநாட் செல்லும் பணிகொண்டு"
- போற்றிப்பஃறொடை.
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
 பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு."
- திருக்குறள், 5.
"விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
 முயக்கற்றம் பார்க்கும் பசப்பு."
-திருக்குறள், 11. - 86.
பேரின்பப் பெருவெளியின் இயல்பை வருமாறுணர்க :

"இரவு பகலில்லா இன்பவெளி யூடே
 விரவி விரவிநின் றுந்தீபற
 விரைய விரையநின் றுந்தீபற."
- திருவுந்தியார், 20.
     இரவு - ஆணவம். பகல் - மாயை.
(6)