தாராத அருளெலாந் தந்தருள மௌனியாய்த | தாயனைய கருணைகாட்டித் | தாளிணையென் முடிசூட்டி அறிவிற் சமாதியே | சாசுவத சம்ப்ரதாயம் | ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்திநிலை | ஒன்றோ டிரண்டெனாமல் | ஒளியெனவும் வெளியெனவும் உருவெவும் நாதமாம் | ஒலியெனவும் உணர்வறாமல் | பாராது பார்ப்பதே ஏதுசா தனமற்ற | பரமஅநு பூதிவாய்க்கும் | பண்பென் றுணர்த்தியது பாராம லந்நிலை | பதிந்தநின் பழவடியாதஞ் | சீரா யிருக்கநின தருள்வேண்டும் ஐயனே | சித்தாந்த முக்திமுதலே | சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே | சின்மயா னந்தகுருவே. |