பக்கம் எண் :

படல

 

       செங்கீரைப் பருவம்

261

படல் அடியாரைப் பூசித்தல் ஆகிய புறத்தொழிலால் இறைவனை நோக்கி நோக்கிச் செய்யும் வழிபாடாகும் எனலாம்.  இறைவர் மணிமொழியார்க்கு உபதேசித்த உபதேச மொழிகள் கொண்டும் இக்கருத்தைத் தெளியலாம்.

    ஆவ லால்எமக் காம்மலர் மரங்கல் ஆக்கல்
        அம்மலர் பறித்தல்அம் மலரால்
    தாவி லாவகை தார்பல சமைத்தல் தணப்பில்
        எம்புகழ் சாற்றல்அன் புடனாம்
    மேவும் ஆலயம் அலகிடல் மெழுகல் விளங்க
        நல்விளக் கிடுதல்எம் அடியார்க்
    கேவல் ஆனவை செய்தல்இச் சரியை இயற்ற
        வல்லவர்க் கெம்உல களிப்போம்

என்பது வாதவூர் அடிகள் புராணம்.

    சிவஞான சித்தியாரும் இம்மார்க்கத்தின் இயல்பை இவ்வாறே எடுத்து இயம்புகிறது.  அதுவே,

தாசமார்க் கம்சாற்றில் சங்கரன்தன் கோயில்
    தலம்அலகிட் டிலகுதிரு மெழுக்கும் சாத்திப்
போதுகளுக் கொய்துபூந் தார்மாலை கண்ணி
    புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடித்
தீதில்திரு விளக்கிட்டுத் திருநந்த வனமும்
    செய்துதிரு வேடங்கண் டால்அடியேன் செய்வ
தியாதுபணி யீர்என்று பணிந்துஅவர்தம் பணியும்
    இயற்றுவதிச் சரியை செய்வோர் ஈசன்உல கிருப்பர்

என்பது.

    இவ்வாறு இச் சரியை மார்க்கத்தைத் தாம் மேற்கொள்ளவில்லையே என்று மணிமொழியார் மொழிவதையும் காண்க.

    “ ஆமாறுஉன் திருவடிக்கே
          அகம்குழையேன் அன்புருகேன்
      பூமாலை புனைந்தேத்தேன்
          புகழ்ந்துரையேன் புத்தேளிர்