வன
|
|
பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி |
13 |
வன்சொல் யவனர்
வளநாடு வன்பெருங்கல்
தென்குமரி ஆண்ட
தெருவில் கயல்புலியான்
மன்பதைகாக்
கும்கோமான் மன்னன் திறம்பாடி
மின்செய் இடைநுடங்க
ஆடாமோ ஊசல்
விறல்வில்
பொறிபாடி ஆடோமோ ஊசல்
என்பது ஊஞ்சல் பருவக்
குறிப்பை உணர்த்தும் பாடல்.
கி. பி. நான்காம்
நூற்றாண்டினரான மாணிக்கவாசகர் திருவாசகத்திலும் அம்மானைப் பருவம், ஊசல் பருவக்
குறிப்புக்கள் உள்ளன.
கேட்டாயோ தோழி
கிறிசெய்த வாறொருவன்
தீட்டார் மதில்புடைசூழ்
தென்னன் பெருந்துறையான்
காட்டா தனஎல்லாம் காட்டிச்சிவம்
காட்டித்
தாட்டா மரைகாட்டித்
தன்கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய நாமேலை
வீடெய்த
ஆட்டான் கொண்டாண்டவா
பாடுதுங்காண் அம்மானாய்
என்றும்,
சீரார் பவளங்கால் முத்தம்
கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி
இனிதமர்ந்து
நாரா யணன்அறியா நாள்மலர்த்தாள்
நாயடியேற்
கூராகத் தந்தருளும் உத்தர
கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தாள்
இணைபாடிப்
போரார் வேல்கண்
மடவீர் பொன்னூசல் ஆடாமோ
என்றும் வருதல் காண்க,
கி. பி. ஏழாம் நூற்றாண்டினரான
திருஞானசம்பந்தரும் பெண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவக் குறிப்புக்களைத் தமது திருப்பதிகங்களில்
குறிப்பிட்டுள்ளனர்.
பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப்
பீடுடைய
மலைச்செல்வி
பிரியா மேனீ
அருந்தகைய சுண்ணவெண்நீ
றலங்கலரித்தான்,
அமரர்தொழ
அமரும் கோயில்
|