அவர
|
பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி |
3 |
அவர் விளையாட்டு மகளிரொடு
பொருந்தியக்கண் “ என்று எழுதியுள்ளனர்.
நச்சினார்க்கினியர்
உரைகண்டபோது, “ குழவிப்பருவத்தும் காமப்பகுதி உரியதாகும் “ என்று கூறியுள்ளனர். விளக்கம்
தரும் இடத்து, குழவியைப்பற்றிக் கடவுள் காக்க என்று கூறுதலானும், பாராட்டும் இடத்துச் செங்கீரையும்,
தாலும், சப்பாணியும், முத்தமும், வரவுரைத்தலும், அம்புலியும், சிற்றிலும், சிறுதேரும், சிறுபறையும்
எனப் பெயரிட்டு வழங்குதலானும் என்பது. “ என்று எழுதியுள்ளனர். இவ்வுரைகளையும் விளக்கங்களையும்
காணும்போது, பிள்ளைத் தமிழ்பாடும் வழக்கம் தொல்காப்பியர் காலத்தும் அவர்க்கு முன்பும்
இருந்தது என்பது வெள்ளிடைமலை என விளக்க மாகின்றதன்றோ ? பிள்ளைத்தமிழ், பிள்ளைப் பாட்டெனவும்
வழங்கப் பெறும்.
இச்சூத்திரத்தையும்
இச்சூத்திரத்தின் கருத்தையும் ஒட்டியே பின்னால்வந்த பாட்டியல் இலக்கணக்கருத்தாக்கள்,
மேலும் பல விளக்கங்களுடன் பிள்ளைத்தமிழ்பாடுதற்குரிய இலக்கணங்களை வகுத்து உரைப்பாராயினர்.
கி.பி. பன்னிரண்டாம்
நூற்றாண்டில் திகழ்ந்த குணவீர பண்டிதர் தாம் எழுதிய வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலில்,
பிள்ளைத்தமிழ் பாடும் முறையினை.
“ கண்டுரைக்கில்
பிள்ளைக் கவிதெய்வம் காக்கஎனக்
கொண்டுரைக்கும் தேவர்
கொலைஅகற்றி _ ஒண்தொடியாய்
சுற்றத் தளவா
வகுப்பொடு தொல்விருத்தம்
முற்றுவித்தல் நூலின்
முறை “ என்றும்,
“ சாற்றரிய
காப்புத்தால் செங்கீரை சப்பாணி
மாற்றரிய முத்தமே
வாரானை _ போற்றரிய
அம்புலியே ஆய்ந்த
சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரொடும்
பத்து “
|