New Page 1
4 |
பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி |
“ முறைதரும்மூன் றாதிமூ
ஏழ்ஈறாம் திங்கள்
அறைகநிலம் பத்தும் ஆண்
டைந்தேழ் - இறைவளையார்க்
கந்தம் சிறுபறையே ஆதியா
மூன்றொழித்துத்
தந்தநிலம் ஓர்ஏழும்
சாற்று “
என்று குறிப்பிட்டுள்ளனர்.
இக் கருத்துக்களையே பன்னிரு பாட்டியல்,
“ பிள்ளைப் பாட்டே
தெள்ளிதில் கிளப்பின்
மூன்று முதலா மூஏழ்
அளவும்
ஆன்ற திங்களின்
அறைகுவர் நிலையே “
“ ஒன்றுமுதல் ஐயாண்டோதினும்
வரையார் “
“காப்பொடு செங்கீரை
தால்சப் பாணி
யாப்புறு முத்தம்
வருகஎன் றல்முதல்
அம்புலி சிற்றில்
சிறுபறை சிறுதேர்
நம்பிய மற்றவை
சுற்றத் தளவென
விளம்பினர் தெய்வ
நலம்பெறு புலவர் “
“ திருமால் அரனே
திசைமுகன் கரிமுகன்
பொருவேல் முருகன்
பருதி வடுகன்
எழுவகை மங்கையர்
இந்திரர் சாத்தன்
நிதியவன் நீலி
பதினொரு மூவர்
திருமகள் நாமகள்
திகழ்மதி என்ப
மருவிய காப்பினுள்
வருங்கட வுளரே “ என்கிறது.
கி.பி. பதினாறாம்
நூற்றாண்டினரான பரஞ்சோதியார் தாம் பாடிய சிதம்பரப்பாட்டியலில்,
துறுகொலை நீக்கித் தெய்வக்
காப்பாய்ச் சுற்றம்
தொகைஅளவு வகுப்பகவல்
விருத்தம் தன்னால்
முறைகாப்புச் செங்கீரை
தால்சப் பாணி
முத்தம்வா ரானைஅம்
புலியி னோடு
சிறுபறைசிற் றில்சிறுதேர்
இவைபின் மூன்றும்
தெரிவையர்க்குப்
பெருகழங்கம் மானை ஊசல்
பெறுமூன்று முதல்இருபத் தொன்றுள்
ஒன்றைப்
பெறுதிங்கள் தனில்பிள்ளைக்
கவியைக் கொள்ளே
என்று எடுத்து மொழிந்துள்ளனர்.
கி.பி. பதினேழாம்
நூற்றாண்டினரான வைத்திய நாத தேசிகர், தாம் இயற்றிய இலக்கண விளக்கப் பாட்டியலில்,
|