New Page 1
|
பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி |
5 |
“ கடுங்கொலை நீக்கிக்
கடவுள் காப்புச்
செங்கீரை தால்சப்
பாணி முத்தம்
வாரானை முதல வகுத்திடும்
அம்புலி
சிறுபறை சிற்றில்
சிறுதேர் என்னப்
பெருமுறை ஆண்பால்
பிள்ளைப் பாட்டே
அவற்றுள்,
பின்னைய மூன்றும் பேதையர்க்
காகா
ஆடும் கழங்கம்
மானை ஊசல்
பாடும் கவியால் பகுத்து
வகுப்புடன்
அகவல் விருத்தத் தால்கிளை
அளவாம் “
“ மூன்று முதல்மூ ஏழு திங்களில்
ஒற்றை பெற்ற முற்றுறு
மதியின்
கொள்ளுக பிள்ளைக்
கவியைக் கூர்ந்தே “
“ மூன்றைந் தேழாம்
ஆண்டினும் ஆகும் “
என்று விளக்கியுள்ளனர்.
இங்கு எடுத்துக் காட்டப்பட்ட
பிள்ளைத்தமிழ் இலக்கண விதிப்படி, நாம் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்க் குரிய பருவங்கள்
காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தலாப்பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம்
வருகைப் பருவம், அம்புலிப் பருவம் சிறுபறைப்பருவம், சிற்றில் பருவம், சிறுதேர்ப்பருவம், ஆகப்பத்து
என்பதையும், பெண்பால் பிள்ளைத்தமிழ்க் குரிய பருவங்கள், காப்புப் பருவம், செங்கீரைப்
பருவம், தலாப்பருவம், சப்பாணிப் பருவம், முத்தம்பருவம், வருகைப்பருவம், அம்புலிப்பருவம், கழங்குப்பருவம்,
அம்மானைப்பருவம், ஊசல் பருவம் ஆகப்பத்து என்பதையும் அறிகின்றோம். ஒவ்வொரு பருவமும் குழந்தை
பிறந்த மூன்று மாதங்களில் இருந்து ஐநது, ஏழு, ஒன்பது, பதினொன்று, பதின்மூன்று, பதினைந்து, பதினேழு,
பத்தொன்பது இருபத்து ஒன்று ஆகிய ஒற்றைப்பட்ட மாதங்களில் முறையே அமையப் பாடப்படுவது என்பதையும்,
வகுப்புப் பாவிலேனும், விருத்தப் பாவிலேனும் பாடப்படுவது என்பதையும் அறிகிறோம்.
|