ஆண

6

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

ஆண்பாற் பிள்ளைத் தமிழ்க்குரிய சிறுபறை, சிற்றில், சிறு தேர்ப் பருவங்கட்கு முறையே குழந்தையின் ஐந்தாண்டு, ஆறு ஆண்டு, ஏழாண்டு பருவங்களில் பிள்ளைத்தமிழ் பாடுக என்னும் குறிப்பு, இலக்கண விளக்கப்பாட்டியலில் வரும்  ‘ மூன்றைந் தேழாம் ஆண்டினும் ஆகும் “  என்னும் நூல்பாவால் தெரியவருகின்றது. இதே குறிப்பு வெண்பாப் பாட்டியலில் வரும்.

         முறைதரும்மூன் றாதிமூ ஏழ்ஈறாம் திங்கள்

         அறைகநிலம் பத்தும்ஆண் டைந்தேழ் “

என்ற  அடிகளாலும் அறிய வருகிறது.

   காப்பும் பருவம் பாடும் முறையையும் இலக்கண விளக்கப் பாட்டியலில்,

   மங்கலம் பொலியும் செங்கண் மாலே

   சங்கு சக்கரம் தரித்த லானும்

   காவல் கடவுள் ஆத லானும்

   பூவினுள் புணர்த லானும்முன் கூறிக்

   கங்கையும் பிறையும் கடுக்கையும் புனைஉமை

   பங்கன்என் றிறைவனைப் பகர்ந்து முறையே

   முழுதுல கீன்ற பழுதறும் இமயப்

   பருப்பதச் செல்வியை விருப்புற உரைத்து

   நாமகள் கொழுநன் மாமுகில் ஊர்தி

   ஒற்றைக் கொம்பன் வெற்றி வேலன்

   எழுவர் மங்கையர் இந்திரை வாணி

   உருத்திரர் அருக்கர் மருத்துவர் வசுக்கன்

   பூப்புனை ஊர்தியில் பொலிவோர் அனைவரும்

   காப்ப தாகக் காப்புக் கூறும்.

 என்று கூறப்பட்டுள்ளது.

    காப்புப்பருவத்தில் ஒன்பது, அல்லது பதினாருபாடல்கள் அமையவேண்டும் என்னும்விதியையும்  “ஒன்பது பதினொன்று என்பது காப்பே “  என்னும் நூல்பாவால் விளங்குகிறது. காப்புப் பருவத்தில் முதல் வணக்கம், திருமால் வணக்கமாக இருத்தல் வேண்டும் என்பதையும், அதற்குரிய காரணங்கள்