இன

 

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

7

இன்ன என்பதையும் அவ்விலக்கண விளக்கப் பாட்டியல் எடுத்து இயம்பியுள்ளதைக் காப்புப்பருவம் பாடுமுறையை விளக்கிக் கூறும் சூத்திரத்தின் முதல் நான்கு அடிகளில் சுட்டி இருப்பதையும் காணவும். இக்கருத்தையே,

    “ அவன்தான்

    காவல் கிழவன் ஆக லானும்

    பூவின் கிழத்தியைப் புணர்த லானும்

    முடியும் கடகமும் மொய்பூந் தாரும்

    குழையும் நூலும் குருமணப் பூணும்

    அணியும் செம்மல் ஆக லானும்

    முன்னுற மொழிதற் குரியன் என்ப “

என்று பாட்டியல் இலக்கண ஆசிரியரும் கூறுவர்.

   காப்புப்பருவம் என்பது, ஒன்பது பாடல்களைக் கொண்ட தாகவேனும், பதினொரு பாடல்களைக் கொண்டதாகவெனும் அமையவேண்டும் என்பதனால், ஏனைய பருவங்கள் பப்பத்துப் பாடல்களைக் கொண்டு திகழும் என்பதை அறியவும். ஆனால், ஆசிரியர் மாதவச் சிவஞான முனிவர் தாம் பாடிய செங்கழு நீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் நூலில், காப்புப்பருவம் முதல் சிறுதேர் பருவம் ஈறாகத் தனித்தனி ஐந்தைத்து பாடல்களையே பாடியுள்ளனர். காப்புப் பருவம் அமைய வேண்டிய இலக்கண முறை பலபடி மாறிவருகின்றது என்பது இதுவரை வெளிவந்துள்ள பிள்ளைத்தமிழ் நூல்களால் அறிய வருகின்றது. இவ்வுண்மையைச் சில பிள்ளைத்தமிழ் நூல்களின் காப்புப்பருவ அமைப்பினை ஈண்டு எடுத்துக் காட்டுவதன் மூலம் நன்கு அறியலாம்.

   சிவஞான பாலைய சுவாமிகள் மீது சிவப்பிரகாச சுவாமிகள் பாடியுள்ள பிள்ளைத்தமிழ் நூலில் திருமால், மல்லிகார்ச்சுனேசுரர், உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், அல்லமதேவர், வசவதேவர், தேவாரம் அருளிய மூவர், மாணிக்கவாசகர், சென்னவசவர் ஆகிய இப்பதின்மர் காக்க எனப் பத்துப்பாடல்கள் காப்புப் பருவமாக உள்ளன. பாட்டுடைத்தலைவரும், நூலாசிரியரும் வீர