New Page 1

 

சேக்கிழார் வரலாறும் காலமும்

57

தொண்டை நாட்டில் முதல் முதல் குடி ஏறிய வேளாளன் மரபில் வந்தவர்களே சேக்கிழார் குடியினர் எனப்படுவர். 

     இச் சேக்கிழார் குடியினர்க்கு ஓர் ஆண் மகவு பிறந்தது.  அக்குழந்தைக்கு அருண்மொழித் தேவர் என்ற பெயர் இட்டு வளர்த்தனர்.  அருண்மொழித் தேவர் என்பது இராசராச சோழன் பெயர்களுள் ஒன்று.  இதனால் வேளாளர்கட்கு அரசன் மாட்டுள்ள அன்பினை நன்கு உணரலாம். 

        சேக்கிழார் மரபினர்க்கு மற்றும் ஓர் ஆண் மகவு பிறந்தது. அது பாலறாவாயர் என்ற பெயருடன் வளர்ந்தது.  (இவ்விருவரின் பெற்றோர்கள் வெள்ளியங்கிரி முதலியார் என்றும் அழகாம்பிகை என்றும் கூறுவர்)  சேக்கிழார் பெருமானார் பிறந்த இல்லமே இதுபோது அவரது பெயரால் கோவிலாக வேளாளர் வீதியில் துலங்குகிறது.  அக்கோயில் அண்மையில், வித்துவான் மறை திருநாவுக்கரசின் அரும் பெரும் முயற்சியினால் பல அன்பர்களின் துணையினால் நன்முறையில் கட்டப்பட்டு, அண்மையில் குடமுழுக்கு விழாவும் செய்யப்பட்டது.  சந்நிதி வீதியில்,  அதாவது சேக்கிழார் கோவிலுக்கு வடவண்டைக் கோடியில் சேக்கிழார் மடமும் ஒன்று உள்ளது.  இவ்விரண்டையும் திரு பாலசுப்பிரமணிய முதலியார் என்பவர் நன்கு கண்கானித்து வருகின்றனர். 

        சேக்கிழார் பிறந்து அறிவு வளர்ந்து இறை அன்பு மேலிட்டிருந்த நிலையில் சோழ நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான திருநாகேச்சுரம் என்ற தலத்தினிடத்தில் மிகுந்த பற்றுக்கொண்டு விளங்கினர்.  அதன்  அறிகுறியாகத் திரு நாகேச்சுரம் என்ற திருப்பெயரால் தம் ஊருக்கு அருகே ஈசான மூலையில் ஓர் ஆலயம் கண்டு இலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அத்தலத்திற்குத் திருநாகேச்சுரம் என்ற பெயரையும் சூட்டி வணங்கி வந்தனர்.  அவ்வாலயம் இருக்கும் இடம் அவ்வாலயத் திருப்பெயரால் திருநாகேச்சுரம் என்ற பெயரால் இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.  அவ்வாலயம் இதுபோது செங்குந்த முதலியார் மரபினர் கைவசமாகிச்