ச
58 |
சேக்கிழார் வரலாறும் காலமும் |
சீரும் சிறப்புடன்
பெருவிழா, சேக்கிழார் பெருமானார் விழா முதலானவை நடத்தப்பெற்று சிறப்புடன் திகழ்கிறது.
சேக்கிழார்
முதல் அமைச்சர் ஆதல் : சேக்கிழார் பெருமானார் அருண்மொழித் தேவர் எனப் பெற்றோர்களால்
பெயர் வைக்கப்பட்டவராயினும், அவர் பிறந்ததனால் சேக்கிழார் மரபு, பேரும் புகழும் சீரும் சிறப்பும்
உற்றமையின், சேக்கிழார் என்றே அன்றும் இன்றும் அழைக்கப்பட்டு வருவாராயினர். சேக்கிழார்
பெருமானார் இளமை முதலே நன்கு கல்வி கற்று, இலக்கண இலக்கிய திருமுறைகள், சாத்திரம் புராண இதிகாசங்களில்
நல்ல பயிற்சியும், கல்வெட்டு ஆய்வும், வரலாற்றுப் புலமையும் கொண்டு திகழ்ந்தனர். இவர்
காலத்துச் சோழன், “ தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்று ஒளவையார் கூறி இருப்பது உண்மைதானா ?”
என்று பரிசோதிக்க, ‘அவன் காலத்து மன்னனான ‘தொண்டைமானுக்கு , “மலையில் பெரிது எது ?
கடலில் பெரிது எது ? உலகில் பெரிது எது ? இவ்வினாக்களுக்கு ஏற்ற விடையினை தொண்டை நாட்டுச்
சான்றார் வாயிலாக விடை கண்டு அறிவிக்க வேண்டு “ மென எழுதி ஆள்மூலம் போக்க, அம்மன்னன்
அதுபோது கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய சேக்கிழாரிடம் கொடுக்கச் சேக்கிழார்
பெருமானார் அம்மூன்ற வினாக்களுக்கு நேர் விடையாகத் திருக்குறளிலிருந்தே.
நிலையில் திரியா
தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப்
பெரிது
பயன் தூக்கார் செய்த
உதவி நயன்தூக்கின்
நன்மை கடலில் பெரிது
காலத்தி னால்செய்த
நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப்
பெரிது
என்று எழுதி அனுப்பினர்.
இதனைச் சிதம்பரச் சபாநாதர் புராணம்,
|