ஞ
|
சேக்கிழார் வரலாறும் காலமும் |
59 |
ஞாலமலை கடல்தன்னில்
பெரியதெது எனஎடுத்து
ஞால
மாள்செங்
கோலரசன் அனபாயன்
வினவியமுத் திறக்குறிப்பைக்
குறிப்பின் ஓர்ந்து
சாலஉயர் திருக்குறண்மூன்
றிறையாக எழுதியவன்
அரசு
தாங்கி
வாலறிவால் திருத்தொண்டர்
புகழ்விரித்தசேக்கிழார்
மலர்த்தாள்
போற்றி
என்று போற்றியதால்
அறியலாம். கம்பரும் சேக்கிழாரின் நுண் அறிவை வியந்து வேளாளர் மாண்பைப் புகழும் ஏர் எழுபது
என்னும் அவரது நூலில், “ காவலவன்,
மண்ணில் கடலில்
மலையில் பெரிதென்என
எண்ணிஎழு திக்கொடுத்த
ஏற்றக்கை
என்று கூறிப் பாராட்டியதைக்
காண்க.
இங்ஙனம் எழுதி
அனுப்பிய விடையினைக் கண்ட சோழன் இத்தகைய அறிஞர் தம் ஆத்தானத்தில் இருப்பின், நாடு
நலனுறும் என்று கருதிச் சேக்கிழார் பெருமானாரை வரவழைத்து முதல் அமைச்சராக்கி உத்தமச் சோழப்
பல்லவர் என்ற பட்டத்தையும் ஈந்தனன்.
பெரிய புராணம்
இயற்றக் காரணம் : சேக்கிழார் முதல் அமைச்சுப் பூண்டு உத்தமச் சோழ பல்லவர் என்ற பட்டத்துடன்
அரசை நடத்தி வருகையில், சோழ மன்னன் திருத்தக்க தேவர் பாடிய சீவக சிந்தாமணியினைப்
பொருள் விரிக்குமாறு கேட்டு இன்புற்று வந்தனன். இதனைக் கண்ட சேக்கிழார், சோழன் சைவ மரபினனாக
இருந்தும், தன்னைப் போன்ற ஒரு மன்னனது சரித்திரத்தை-அதுவும் சைன சமயக் காவியத்தை-கேட்டு
இம்மை இன்பத்தோடு மறுமை இன்பத்தையும் இழக்கின்றானே என்ற இரக்கத்தால், சீவகன் வரலாற்றைக்
கேட்காதவாறு தடுத்துச் சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத் தொகையில் குறிப்பிட்ட நாயன்மார்களின்
|