சர

60

          சேக்கிழார் வரலாறும் காலமும்

சரித்திரத்தைக் கேட்குமாறு செய்து, அவ்வரலாறுகளை முறையாகக் கூறினர்.  மன்னன் சிவனடியார்களின் சரித்திரத்தைக் கேட்டதும், ஆனந்தப் பரவசனாய், அவ்வரலாறுகள் தன் அளவில் கேட்டு இன்புற்றதோடு நிறுத்தாமல், மக்கள் யாவரும் உணர சேக்கிழார் பெருமானாரையே நூல் வடிவில் ஒரு காவியமாகப் பாடி அருளுமாறு வேண்டச் சேக்கிழார் பெருமானாரும் மன்னனிடம் விடை பெற்றுச் சிதம்பரம் வந்துற்றுக் கூத்தப் பெருமானார் திருமுன் நின்று,  “  கூத்தப் பெருமானே உனது அடியார் வரலாற்றை நான் எங்ஙனம் பாடுகேன் “  என்ற குறை இரந்து வணங்கிக் கேட்டபோது, நடராசப் பெருமானாரது திருவருளால் ‘ உலகெலாம் ‘  என்று வாக்கு அசரீரியாக எழ, அதனையே மகுடமாகக் கொண்டு,

 

     உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்

     நிலவு லாவிய நீர்மலி வேணியன்

     அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்

     மலர்சி லம்படி வாழ்த்திவ ணங்குவாம்

 

என்ற வாழ்த்துப் பாடலைப் பாடி திருத்தொண்டத்தொகை, ஏனைய திருமுறைகள், கல்வெட்டு ஆதரவு, வரலாற்று நூல், இவற்றின் துணைகொண்டும், நேரில் சென்றும், ஆட்களைப் போக்கி அறிந்தும், நூலை இனிதின் முடித்தனர்.  நூலுக்குத் திருத்தொண்டர் புராணம் என்னும் பெயரைச் சூட்டினர்.  நூல் முடியும்வரை சேக்கிழார் பெருமானார்க்கு வேண்டிய பொருள் உதவி, வாகன உதவி, ஆள் உதவி மற்றும்பல உதவிகளை அரசன் செய்து வந்தனன்.

 

       சேக்கிழார்க்கு அரசன் செய்த சிறப்பு :   சேக்கிழார் நூல் செய்து முடித்ததை அரசன் கேட்டு, தில்லை வந்துற்று, அவரையும், அவர் நூலையும் யானைமீது ஏற்றிப் புலவர் பெருமானார்க்குத் தன் கரத்தால் வெண் சமரை வீசித் திருத்தொண்டு புரிந்தனன்.  இறைவன் மன்னன் செவியில் உறுமாறு நூற் பொருளையும் சேக்கிழாரே உரைக்கக் கேட்குமாறு அசரீரியாகக் கூற, மன்னன் மகிழ்ந்து நூற் பொருளை விளக்குமாறு சேக்கிழாரைப் பணிந்து