அந

 

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

9

   அந்தகக் கவி வீரராகவ முதலியார் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் திருமால், வன்மீகநாதர், முத்துவாளி அம்மையார், கங்காதேவி, சித்தி விநாயகர், சரவணப் பொய்கை, வேலாயுதம், வைரவக்கடவுள், கார்த்திகைத்தாயர், பிரணவப் பொருள் ஆகிய இவர்கள் காக்க எனப் பத்துப் பாடல்களுடன் காப்புப் பருவம் அமைந்துளது. 

   திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தாம்பாடியுள்ள சேக்கிழார் பிள்ளைத் தமிழ் நூலின் காப்புப் பருவத்தில் தெய்வங்கள் எதனையும் காப்புத் தெய்வமாக வைத்துப் பாடாமல், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியுள்ள திருத்தொண்டத் தொகையில் அமைந்த நாயன்மார்கள் அனைவரும் காக்க என்ற முறையில், அத்திருத்தொண்டத் தொகையில் உள்ள பதினோரு பாடல்களின் முதல் குறிப்புக்களையே தலைப்பாகக் கொண்டு பதினொரு பாடல்களைப் பாடி அமைத்துள்ளனர். திரு பிள்ளை அவர்களே திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகர்மீது பாடியுள்ள பிள்ளைத் தமிழிலும் காப்புப்பருவ அமைப்பினைப் பாட்டியல் இலக்கணிகள் கூறும் அமைப்பில் கூறாது, திரு நந்திதேவர், சனற்குமார முனிவர், சத்தியஞான தரிசினிகள் பரஞ்சோதி முனிவர், அருள்நந்தி சிவாசாரியார், அருணமச்சிவாயர், சித்தர் சிவப்பிரகாசர், நமச்சிவாய மூர்த்திகள் முதலிய பதினால்வர் ஆகிய சுத்தாத்துவித சைவ சித்தாந்த ஆசாரிய பெருமக்களையே காப்புக் கடவுளராக அமைத்துப் பதினோரு பாடல்களை அமைத்துள்ளனர்.

    பகழிக்கூத்தர் தமது திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் நூலின் காப்புப் பரு வத்தில் திருமால், சிவபெருமான், உமையவள், கணபதி கலைமகள், அரிகரபுத்திரன், பகவதி, ஆதித்தர், முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோர் முருகனைக் காக்க எனக் கூறியுள்ளனர்.