10 என்பது ஒரு கீர்த்தனையின் பல்லவி அப்பாடலின் சரணங்களின் ஒருபகுதி பின்வருமாறு. மருவுதெய் வானையொடு ஒருகுறமின் னாளும் மன்மத வேளும் வழிபடும் அழகொழுகிய பன்னிரு தோளும் கண்டெந்த நாளும் கரையும் அன்பர் நிறையும் பொன்னூல் அரையும் முகத்தா மரையும்-மேனியில் வருணமும் இரணமும் திருவா பரணமும் சரணமும் மூவிரு சிரமும் கரமும் திருச்சுந் தரமும் தரித்த நூலும் திருக்கை வேலும் - தரிசிக்க (ஆயிர) இதன்கண் இயைபுத் தொடையும் வழி எதுகையும் சிறப்பாக அமைந்துள்ளமை காணலாம். சிங்கார வேலவர் பதங்களில் ஒருபாடல் “ஒருத்தியவன் உம்மை வரச் சொன்னான் காண்” என்னும் பல்லவியை உடையது. அதனுடைய சரணங்களுள் ஒன்று பின் வருமாறு அமைந்துள்ளது. அண்ணல் கபாலீசர் பாலா தெய்வாயானை வள்ளியம்மைக் கலங்கிருத லோலா வண்ணக் கடம்பணிவி சாலா தென்-மயிலையும் பதிவரு சிங்கார வேலா விண்மீதில் ஓடிவரும் இந்து வீசுநிலவாலே களை வந்து எண்ணாதெல்லாம் எண்ணிமனம் நொந்து ஏங்கிஏங்கி மகள் மிக நைந்து என்னசெய்வாள் வெகுநாழிகை மட்டு இவ்விடமே நினைவாகவே தொட்டு அன்னமுடன் கிளிதனையும் விட்டு ஆயிரந் தரமுண்டென்னைக்கும் பிட்டு ஒருத்தியவள் உம்மை வரச்சொன்னாள் காண் பரிதனிலிந்திராணி பரமள வேணி (ஒரு) அதன்கண் தலைவி தனது விரகதாபத்தை உருக்கமாகப் புலப்படுத்துவதைக் காணலாம். மற்றொரு கீர்த்தனைமயிலைக் கற்பக வள்ளியம்மை மீது பாடப்பட்டுள்ளது. அதன் பல்லவி |