9 பருவங்களை 100 பாடல்களால் ஆன இவ்இலக்கியம். இது 1899-இல் அச்சிடப்பட்டுள்ளது இதனைக் கவிராயர் மிகவும் ஈடுபட்டுப் பாடியுள்ளார். அசோமுகி நாடகம் இலக்குமணன் மீது காமுற்று வலியச் சென்று அவனைப் பிடித்த போது அவனால் கொல்லப்பட்ட ஒருஅரக்கி அசோமுகி. கவிஞர் இருவரது உரையாடல்களையும் நாடக வடிவில் செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. இந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை அச்சானதாகத் தெரியவில்லை. காழிஅந்தாதி சீகாழியையும் இறைவனையும் போற்றி அந்தாதியாகச் செய்யப்பெற்றதொரு சிற்றிலக்கியம். இது அச்சிடப்பட்டுள்ளது. காழிப்பள்ளு சிதம்பரநாத முனிவரால் தொடங்கப் பெற்று அவர் விருப்பப்படி கவிராயரால் பாடி முடிக்கப்பெற்றபள்ளுப் பிரபந்தம் இதனின்று ஐந்து பாடல்களே கிடைத்தனவென்று மு.அருணாசலம்பிள்ளை கூறியுள்ளார். காழிக்கோவை - காழிக் கலம்பகம் இவை கிடைக்கவில்லை அச்சானதாகவும் தெரியவில்லை. தியாகேசர்வண்ணம் இப்பிரபந்தம் இலிங்கப்பச்செட்டியார் குமாரர் தேப்பெருமாள் செட்டியாரின் முன் அரங்கேற்றப்பட்டது என்பது கவிராயர் அவரைப் போற்றிப் பாடியுள்ள கணிகொண்ட பஞ்சலட்சணம் எனத் தொடங்கும் சீட்டுக் கவியில் குறிக்கப்பட்டுள்ளது. கிடைக்கவில்லை அச்சானதாகவும் தெரியவில்லை. கீர்த்தனைகள் மயிலைச் சிங்காரவேலவர் மீது இக்கவிராயர் நான்கு கீர்த்தனைகளும் சிலபதங்களும்பாடியுள்ளார். இவர் சென்னையில் தங்கி இராமநாடகப் பிரசங்கம் செய்து வந்த பொழுது இவற்றைப்பாடினர் ஆகலாம். ஆயிரம் கண்கள் வேணும் - மயிலாபுரி ஆறுமுகச் சிங்கார வேலவரைக் காண (ஆயிரம் |