8

     மணிகொண்ட ராமகீர்த் தனையுமது போலவே
          பரிந்துநீ கேட்கவேணும்
     பாரில்ஓ ராயிரம் பிறைகண்டு நீபொருள்
          படைத்து வாழ்ந்திடுக மாதோ

     இச்சீட்டுக் கவியைக் கண்ட தேப்பெருமாள் செட்டியார் கவிராயரை
அழைத்து அவரோடு உரையாடிமகிழ்ந்து பல பரிசுகள் போற்றினார்.

     பின்னர்த் தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டிருந்த மதார்மல்க்
நவாபும் துளசி மகாராஜாவும் சமாதானம் செய்து கொண்டமையால் தஞ்சையில்
அமைதி நிலவிற்று அப்பொழுது கவிராயர் தஞ்சைக்குச்சென்று
துளசிமகாராசாவைப் போற்றிக் கவிகளை எழுதி அனுப்பி அவரது அவையில்
இராமநாடகத்தைப்பிரசங்கித்துப் பரிசுகள் பெற்றார். ஒரு பஞ்சரத்தினமாலை
எழுதி அனந்தரங்கம்பிள்ளையைப் பாராட்டினார் அவரது அவையிலும்
உடையார்பாளையம் சமீந்தாராகிய யுவரங்கப்பஉடையார் அவையிலும்
வேறுசில பாளையப்பட்டு அரசர்கள் அவையிலும் இராமாயணத்தை
அரங்கேற்றி அவர்களால் பல சிறப்பும்பரிசுகளும் பெற்று வாழ்ந்து வந்தார்.

     சீகாழியிலேயே பல்லாண்டுகள் மனைமக்களோடு பல்லாண்டுகள்
வாழ்ந்து தமது அறுபத்தேழாவதுவயதில் இறைவனடி சேர்ந்தார். இவர்
மறைந்தது விகாரி ஆண்டு ஆனி மாதம் என இவருடைய பரம்பரையினால்
கூறப்படுகின்றது. இவ்வரலாற்றுக் குறிப்புக்கள் இவரின் மக்களாய மூவருள்
ஒருவராகிய அம்பலவாணக்கவிராயருடைய மகனாரும் இராமநாடகக்
கீர்த்தனைப் பிரசங்கியுமாகிய சுப்பராயக்கவிராயரால் சொல்லப்பட்டவையாகும்.

     இவர் இராமாயணக் கீர்த்தனை நூலைப் பாடியிருப்பினும் தன்
குடிவழிமரபினாலும் தருமபுர ஆதீனத்திலிருந்துகல்வி பயின்றமையானும்
சைவராகவே வாழ்ந்து வந்தார். இவர் தலையில் தாழ்வடமும் இடையில் தூய
வெள்ளாடையும் பூண்டு திருநீற்றுப்பூச்சுக் கலையாமல் சிவசின்னங்கள் பூண்டு
சைவபண்டாரக் கோலத்தோடுதிகழ்ந்தார் என்பர்.

         
இவர்பாடிய வேறு நூல்களும் கீர்த்தனங்களும்

சீகாழித்தலபுராணம்


     இப்புராணம் 31 அதிகாரங்களும் 1550 பாடல்களும் கொண்டுள்ளது
சிறந்த இலக்கியப் பாங்குடையது.சீகாழியின் பன்னிரு பெயர்களின் சிறப்பை
விளக்கும் பாக்கள் நயமுடையவை. இதனைச் சிதம்பரநாதமுனிவரின்
விருப்பத்தை ஏற்றுச் செய்தார் என்ப. சிதம்பரநாதமுனிவர் இதற்குச்
சிறப்புப்பாயிரம் கொடுத்துள்ளார். இது அச்சாகியுள்ளது.

அனுமார் பிள்ளைத்தமிழ்

     இவ் அனுமார் திரிநேத்திர மாருதி என்று குறிப்பிடப்படுகின்றார். பத்துப்