7

மகிழ்வித்தார்கள் என்று கூற உடனே கவிராயர் அவையும் நான்
பாடியவையே அவ்வித்துவான்கள் எனதுமாணவர்களே என்ற விவரத்தைக்
கூறி அப்பொழுது அவர்கட்காக மிகச் சுருக்கமாகச் சில கீர்த்தனைகளைப்
பாடித்தந்தேன் பின்னர் அவற்றையே மேலும் பல காட்சிகளுடன் விரிவாகச்
செய்துள்ளேன் என்று கூறினார். முதலியாரும் மகிழ்ந்து தனது அவையில்
கம்பராமாயணக் கீர்த்தணை நாடகம் அரங்கேற ஆவன செய்தார்கவிராயர்
தம் நாடகத்தையும் கம்பராமாயணப் பாக்களின் கருத்துக்களையும் உடன்கூறிச்
சிறப்பாகப்பிரசங்கம் செய்து அவரால் மதிக்கப்பெற்று மகிழ்ந்தார்.
முதலியாரவர்கள் கவிராயருக்குப் பலசிறப்புக்களைச் செய்து பரிசுகள் வழங்கி
அனுப்பி வைத்தார் முதலியாரவர்கள் தன்னைப்போற்றிப் பரிசுகள் வழங்கிய
சிறப்புக்களைக் கவிராயர் பின்வருமாறு பாடிச் சிறப்பித்தார்.

     கனந்தந்தான் கனகாபி டேகந்தந்தான்
          களங்கமிலாக் கருப்பொருளை அழைத்துத் தந்தான்
     மனந்தந்தான் முடிசூட்டு மாலை தந்தான்
          வாணி சிங்காதனத் திருத்தி வரிசைதந்தான்

     இனந்தந்தான் இராமகதை எவர்க்கும் தந்தான்
          எனைராமா யணக்கவிஞன் எனப்பேர் தந்தான்
     அனந்தந்தான் மணலிமுத்துக் கிருஷ்ணபூபன்
          அகந்தந்தான் இருமையிலும் சுகந்தந்தானே

     இவ்வாறு முத்துக்கிருஷ்ண முதலியாரிடம் பல பரிசுகளைப் பெற்று
மகிழ்ந்த கவிராயர் லிங்கப்பச்செட்டியார் குமாரர் தேப்பெருமாள்
செட்டியாருக்கும் பின்வருமாறு ஒரு சீட்டுக்கவி எழுதி அனுப்பிவைத்தார்.

     கணிகொண்ட பஞ்சலட்சணமும் ராமாயணக்
          கடலையும் உணர்ந்த புலவன்
     கவிராசர் புகழ்கின்ற காழி அருணாசலக்
          கவிராயன் எழுதும் ஓலை

     மணிகொண்ட மார்பிலிங் கப்பமகிபாலன் அக
          மகிழ்ந்தசுதன் வணிகாதிபன்
     வருஞ்சீர் படைத்ததேப் பெருமான் மகீபனிதை
          மனமுவந் தினிதுகாண்க

     அணிகொண்ட தியாகேசர் வண்ணமுரை செய்ததும்
          அதற்குவெகு மதிசெய்ததும்
     அதுநமக்குபகார மானதும் இப்புவியில்
          அறியாத பேருமுளரோ