6 தோடயத்தில் அமைத்துப்பாடி அரங்கேற்றினார். கோவிலாரும் கவிராயரை கவுரவித்துப் பல பரிசுகளைத்தந்து போற்றினார். பின்னர்க் கவிராயர் தஞ்சையில் அப்பொழுது ஆட்சிசெய்து கொண்டிருந்த மராட்டிய மன்னர் துளசி மகாராஜாவின் அவையில் தன்நூலை அரங்கேற்ற எண்ணித் தஞ்சைக்கு வந்தார். அவ்வமயம் தஞ்சாவூர்கோட்டை சென்னைப் பட்டினம் நவாப்மதார் மல்கின் படையால் முற்றுகையிடப் பட்டிருந்தமையின் அரசரைக்காண இயலாமையால் பின்னர் புதுச்சேரிக்குச் சென்று ஆனந்தரங்கம் பிள்ளையிடம் சென்றுஅவரது அவையில் தன்நூலை அரங்கேற்றும் தனது விருப்பத்தைக் கூறினார். அவர் புலவர்தம் கருத்தை ஏற்று அரங்கேற்றுதற்கு விருப்பமுடையராயினும் தனது மதிப்பிற்குரிய தஞ்சையரசர் இதைக் கேட்பதற்கு முன்தான்கேட்டல் கூடாது என்னும் கருத்தை விளக்கிச் சிலபரிசுகள் தந்து போற்றிச் சென்னையிலுள்ளபெருஞ் செல்வரும் புலவர்களை ஆதரித்து வரும் தன்நண்பருமான மணலி முத்துக்கிருஷ்ண முதலியாரவர்களுக்குக் கவிராயரைப் பற்றிய தகவுரை ஒன்று கொடுத்து அனுப்பி வைத்தார். அவர் எழுதித்தந்த தகவுரையோடுபின்வரும் இட்டுக் கவியையும் எழுதி முதலியாரவர்கட்கு அனுப்பி வைத்தார் கவிஞர். சித்தி தருகிறவல்லி பத்திதருகிற வல்லி தேவர்கள் வணங்கும் வல்லி தில்லை நாயகவல்லி சிவகாம வல்லியிரு திருவிழிக் கருணையாலே சத்தியவா சகனென்று பூமண்ட லாதிபர்கள் தரமெங்கணும் துதிக்கும் சகலபாஷாநிபுண மணலி முத்துக்கிருஷ்ண சதுரநீ வாழி கண்டாய் நத்துமலர்க் குவளை நாண்மதியம்நீ செஞ்சாலி நான்கருவி மழைமேகம்நீ நளினம் நான்பரிதிநீ பிள்ளைநான் அன்னைநீ நான்கவிஞன் வழுதி நீகாண் சுத்தமுள இராமாயணந்தனைக் கொண்டுனது சுகமுமது வெறவருகிறேன் சொற்பொருள் அறிந்தளவு சொல்லுவேன் கேட்கவே துணையாக வேணும் நீயே முதலியார் கவிராயரின் வேண்டுகோளை ஏற்றுத் தனது அவைக்கழைத்தார் கவிராயர் தான் இயற்றியுள்ள இராமாயணத்தைப் பற்றி எடுத்துக்கூறி அதணை அரங்கேற்றி வைக்க வேண்டுமென்றார். அப்பொழுது முதலியாரவர்கள் சிலநாட்களுக்கு முன் இரண்டு பிராமண சங்கீத வித்துவான்கள் இங்கே வந்து கீர்த்தணையில் இராமாயண நிகழ்ச்சிகளைப் பாடி |