5

புதுவை ஆனமுலை உண்டுபேயினுயிர்     போக்கி  அலுத்தீரோ
அதிரஓடிவரும் குருவிவாயை இரண்       டாக்கி   அலுத்தீரோ
துதிசெய் ஆயர்களைக் காக்க வேண்டிமலை தூக்கி   அலுத்தீரோ
சதிசெய் காலினால் காளிங்கன் மணிமுடி    தாக்கி   அலுத்தீரோ மருதம்

     சாய்த்தோ      ஆடுமாடுகள்
     மேய்த்தோ      சகடுருளை
     தேய்த்தோ      கஞ்சன்உயிரை
     மாய்த்தோ      அர்ச்சுனனுக்காகச்

 சாரதியாய்த் தேர்விடுத்த       வருத்தமோ     (ஏன்)
 போரிலே சக்கரம் எடுத்த      வருத்தமோ

3.   படிதனிலே மெத்தவும்       நானே - உம்மைப்
          பரமெனவே அடுத்    தேனே
     அடிமை கொள்வீர் என்னைத் தானே - செம்பொன்
         அணியரங் கம்பெரு   மானே

தடம் உறைந்தகரும் பாறை சாபமது        தடுத்து         ரட்சித்தீரே
விடஒணாதகாகா சூரனுக் கொருகண்        விடுத்து        ரட்சித்தீரே
கொடுமை கொண்டழுந்துரோ பதைக்குத்துகில் கொடுத்து      ரட்சித்தீரே
மடுவில் ஆனைமுன் ஓடிமுதலையை         மடுத்து       ரட்சித்தீரே
                                                  அதுபோல
    வாரும்     கிருபைக் கண்ணாலே
    பாரும்      மனக்கவலை
    தீரும்       நினைத்தவரம்
    தாரும்      தாரும் என்சாமி         

  வட்சழி மேவும்மக லட்சுமியுடன் பெரும்
  மட்ச மாகவென்னை ரட்சிக்க எழுந்திரும்             (ஏன்)

     இவ்வாறான கவிராயருடைய உருக்கமான வேண்டுகோளுக்குப்
பெருமான் இரங்கி அவருடைய கனவில் தோன்றிக்கம்பர் சடகோபாழ்வாரைப்
பாடிப் பெருமை செய்து பின் இராமாயணத்தை அரங்கேற்றியது போலநீரும்
நம் பரிசனங்களைப் போற்றிப் பாடி உமது இராமாயணத்தை
அரங்கேற்றுவீராக என்று அருளிச்செய்து அவ்வாறே ஸ்ரீவைஷ்ணவர்களின்
கனவிலும் தோன்றி இராமநாடகத்தை நம்சந்நிதியில் அரங்கேற்றி
உபசரியுங்கள் என்று கூறியருளினார். பின்னர் அவர்கள் ஒருவரோடொருவர்
தங்கள் கனவில்பெருமானருளிச் செய்தவற்றைக் கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
கவிராயரும் கெருடாழ்வாரையும் சேனை முதலியாகிய விநாயகரையும்
சடகோபரையும் பஞ்சாயுதங்களையும் போற்றித்