4 திருவரங்கத்து ஆச்சாரியர்களும் நிருவாகிகளும் பெருமாள் எங்களுக்கு ஆணையிட்டருளினாலன்றி நாங்கள் அரங்கேற்றுவதற்கியலாது என்று மறுத்துவிட்டனர் அதனால் பெருந்துயரமுற்ற கவிராயர் அவர்கள் திருவரங்கநாதனிடம் முறையிடும் பாங்கில் அவரை இராமனாகவும் கண்ணனாகவும் உருவகித்துப் பின்வரும் கீர்த்தனையால் துதித்தார். தரு மோகனராகம் ஆதிதாளம் பல்லவி ஏன்பள்ளி கொண்டீர் அய்யா - ஸ்ரீரங்கநாதரே நீர் ஏன் பள்ளிகொண்டீர் அய்யா (ஏன்) அநுபல்லவி ஆம்பல் பூத்தசய பருவத மடுவிலே- அவதரித்த இரண்டாற்று நடுவிலே (ஏன்) சரணங்கள் 1) கோசிகன் சொல் குளித்ததற்கோ - அரக்கிக் குலையில் அம்பு தெறித்தற்கோ ஈசன் வில்லை முறித்ததற்கோ - பரசு இராமன் உரம் பறித்ததற்கோ மாசிலாதமிதி லேசன் பெண்ணுடனே வழிநடந்த இளைப்போ தூசிலாதகுகன் ஓடத்திலே கங்கை துறைகடந்த இளைப்போ மீசரமாம்சித்ர கூடச்சிகரக்கல் மிசைகடந்த இளைப்போ காசினிமேல் மாரீசன்ஓடிய கதிதொடர்ந்த இளைப்போ ஓடிக் களைத்தோ தேவியைத் தேடி இளைத்தோ மரங்கள் ஏழும் தொளைத்தோ கடலைக்கட்டி வளைத்தோ இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ ராவணாதிகளை அடித்த வருத்தமோ (ஏன்) 2. மதுரையி லேவரும் களையோ - முதலை வாய்மகளைத் தரும் களையோ எதிர்எருதைப் பொரும் களையோ - கன்றை எடுத்தெறிந்த பெரும் களையோ |