11 வேறுதிக்கறி யேனம்மா நீயேயல்லால் - வேறே ஆதரவேது சொல்வாய் அம்மா இதன் சரணத்தில் ஒன்று பின்வருமாறு அமைந்துள்ளது. பெற்றதாயரக் கல்லாமல் பிள்ளைகள் மீதிலிரக்கம் மற்றொருவர்களுக்கும் வாராதே - இதையறிந்தும் என்றனை நீவிட்டதேதிப் போதே - பெருமரத்தைச் சுற்றிய வல்லிதானும் விடாதே - உள்ளதுசொன்னேன் இத்தனை மாத்திரம்என் பேச்சே என்குல தெய்வம்நீ ஆச்சே உற்றது சொன்னால் அற்றது பொருந்துமே உன்னையல்லாமல் அன்னையே - பின்னை (வேறு) இக்கீர்த்தனங்கள் சென்ற நூற்றாண்டில் வியாசர்பாடி விநாயக முதலியார் கட்டிய “சித்திரச்சத்தீர புகழ்ச்சிமாலை” என்ற பலவித்துவான்கள் பாடல் தொகுப்பில் உள்ளன என மு.அருணாசலம்பிள்ளை எழுதியுள்ளார். மேலும் முத்துத்தாண்டவர் கீர்த்தனைப் புத்தகத்தின் இறுதியில் உள்ளதொரு கீர்த்தனை அருணாசலக்கவிராயர் பாடியதென்று காணப்படுகிறது. அது தில்லைத் தலத்தின் பெருமையை எடுத்தியம்புகின்றது. அதுவருமாறு. பல்லவி தில்லைத் தலம்போலே சொல்லப்புவிமீதில் தெய்வத் தலங்களுண்டோ - நாளும் (தில்லை) அநுபல்லவி சொல்லும் தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது தூயகலை நிறை பாத்திரம் - எங்கும் போய் வருமோர்கலை மாத்திரம் - ஆக ஆயிர மாஞ்சிவ சேத்திரம் (தில்லை) சரணம் பத்திமணிக் கோபுரத்தைக் கண்டால் - சிவ பத்தியிலே மனம் தூங்கும் - அதை உய்த்து வரவரச்சித்தம்பரி - சுத்தம் உள்ளே சிவஞானம் தேங்கும் - அந்த |